இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா

By Dhanalakshmi GFirst Published Jul 14, 2022, 10:57 AM IST
Highlights

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட முஸ்லிம் தலைவர்கள், தமிழ் தலைவர்கள் என்று அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைவில் ஜனநாயகம் மீட்கப்படும் என்று நம்புகிறேன். இலங்கை இப்படி ஒரு பொருளாதார நிலைக்கு செல்லும் என்று நினைக்கவில்லை. இதற்குக் காரணம் கோத்தபய ராஜபக்சேதான் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ஜனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

நான் விரும்பும் எனது தாய் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி, போராட்டம் வெடித்து இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், விரைவில் நாட்டில் அமைதி நிலவும் என்று நம்புகிறேன் என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில் பிரபல சர்வதேச கிரிகெட் வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

பேட்டியின்போது எந்த இடத்திலும் அவர் இலங்கை அரசியல்வாதிகளை கடுமையாக பேசுவதற்கு தயங்கவில்லை. பேட்டியில் அவர் கூறுகையில், ''எனது நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருட்கள் இல்லை, மருந்து இல்லை. இந்த நிலைமை மிகவும் என்னை பாதித்துள்ளது. 

கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதில் சிக்கல்

இதுமாதிரியான ஒரு சூழல் எவ்வாறு உருவானது என்றே தெரியவில்லை. கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால், இன்னும் அவர் செய்யவில்லை. நாட்டை எங்களது அரசியல்வாதிகள் மிகவும் மோசமான வழியில் நடத்திச் சென்றுள்ளனர். நான் முழுமையாக போராட்டம் நடத்தும் மக்களின் பக்கம் இருக்கிறேன். 

அதிபர் மாளிகையில் போராட்டம் நடத்தும் மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்று நான் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்களும் அதுபோல் நடந்து கொள்ளவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருக்கும் மக்கள் கடந்த 9 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அதிபர் கோத்தபய ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதிபர் மாளிகைக்குள் விலை மதிப்பு மிக்க பொருட்கள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு சேதாரம் இல்லாத வகையில்தான் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். தற்போது இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இது தேவையான ஒன்றுதான். அரசை வழி நடத்திச் செல்வதற்கு, எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு என்று ஒருவர் தேவைப்பாடுகிறார். அதனால், அவர் அந்த பொறுப்பு வகிப்பதில் எந்த தவறும் இல்லை. 

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு… இலங்கை போராட்டத்திற்கு மத்தியில் காதல் ஜோடி செய்த செயல் வைரல்!!

கூட்டம் கூடும்போது முஸ்லிம் தலைவர்கள், தமிழ் தலைவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி நாட்டில் ஜனநாயகம் திரும்புவதற்கு தேவைப்படும் அனைத்து வேலைகளையும் ரணில் எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

ஜனத் ஜெயசூர்யாவின் பேட்டியில் கோத்தபய ராஜபக்சேவின் மீது நிர்வாக ரீதியாக கோபம் இருப்பது தெரிந்தது. 

 

click me!