துருக்கி நிலநடுக்கம் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இயற்கை பேரிடர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கி நிலநடுக்கம் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இயற்கை பேரிடர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதை அடுத்து அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: பிரெஷா கேட்டதுக்கு இப்படியா? ஹோட்டலில் சாப்பிடும்போது தட்டில் உயிரோடு துள்ளிய மீன்...!
நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நாட்களை நெருங்கும் சூழலிலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்தயா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு மற்றும் மருத்துவக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் இரு நாடுகளிலும் கட்டிடக் கழிவுகள் குவிந்துகிடப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹான்ன் கிளஷ் கூறுகையில், துருக்கி மற்றும் சிரியாவில் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: கனடாவில் ராமர் கோயில் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்
தேவைகள் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் உதவிகள் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் 70 லட்சம் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கம் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இயற்கை பேரிடர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.