நியூசிலாந்து நாட்டின் பராபரமுவில் இருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பராபரமுவில் இருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் 57.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரவு 7.38 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த 15 நிமிடங்களில் சுமார் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பு கருதி திறந்தவெளிகளுக்கு வந்துவிட்டனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
இதுவரை பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக செய்திகள் இல்லை. பராபரமு, லெவின், பொரிருவா, பிரெஞ்ச் பாஸ், அப்பர் ஹட், லோயர் ஹட், வெலிங்டன், வாங்கனுய், வேவர்லி, பால்மர்ஸ்டன் நார்த், ஃபீல்டிங், பிக்டன், எகெடஹுனா, மாஸ்டர்டன், மார்ட்டின்பரோ, ஹன்டர்வில்லே, ஹவேரா, ப்ளென்ஹெய்ம், செடான், நெல்கென், நெல்கென், பொங்கரோவா, ஸ்ட்ராட்ஃபோர்ட், ஓபுனேக், தைஹாபே, காசில்பாயிண்ட், மோட்யூகா, ஒஹாகுனே மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த அதிர்ச்சி உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rayyana Barnawi: விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி வீராங்கனை ரயானா பர்ணாவி
குறைந்து 30 வினாடிகள் மிதமான அதிர்வுகள் நீடித்ததாவும் அதைத் தொடர்ந்து பெரிய நில அதிர்வு ஏற்பட்டதாவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவு 8 மணியளவில், ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச் உட்பட வடக்கு மற்றும் தெற்கு தீவுகளிலும் சுமார் 60 ஆயிரம் பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, டவுமருனுய் என்ற இடத்திற்கு 45 கிமீ தென்மேற்கில் 78 கிமீ ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் தாக்கியுள்ளது.
Paula Hurd: டென்னிஸ் களத்தில் மலர்ந்த காதல்! பில் கேட்ஸின் புதிய காதலி பவுலா ஹர்ட்!