சிங்கப்பூரில் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த உதவும் சுரங்கப்பாதை வடிகால் திட்டம் வரும் 2026ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நீர்வளத்தை விரிவுபடுத்துவதற்காகவும், கழிவு நீரே சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு சுரங்கபாதை வடிகால் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக 10 பில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவில் 20 ஆண்டுகளுக்கும் மேல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவில் செயல்படுத்த முடியாமல் தாமதமாகி வருகிறது.
இத்திட்டத்தில், குறைந்த அளவு எரிசக்தியைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது.
சுரங்கபாதை வடிகால் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய சுற்றுப்புறத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் சேகரித்து, சுத்திகரித்து, மீட்டெடுத்து NE(W)ater தயாரிப்பதும் நீர் வளத்தைப் பெருக்குவதே நம் குறிக்கோள் என்றார்.
சிங்கப்பூர் LKY நினைவு நாணயம் தயார்! விண்ணப்பித்தவர்கள் செப்.4 முதல் பெற்றுக்கொள்ளலாம்! - நாணய வாரியம் தகவல்!
இதற்கு, சுரங்கபாதை வடிகால் திட்டம் அதற்கு முக்கிய ஆதாரமாய்த் திகழும் என்றும் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார். நூறாண்டுக்கு நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் எதிர் வருங்காலத் தலைமுறையினர் அதிக பலனடைவர் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
undefined
கோடிகள் வேண்டாம்.. காதலே போதும் - லவ்வருக்காக 2000 கோடி ரூபாய் குடும்ப சொத்தை வேண்டாமென்ற இளம்பெண்!