சிங்கப்பூர் நபருடன் போலி திருமணம்: பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை!

By Manikanda Prabu  |  First Published Aug 21, 2023, 9:39 PM IST

சிங்கப்பூர் நபருடன் போலி திருமணம் செய்த பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


சிங்கப்பூரில் தங்கியிருப்பதை நீட்டிப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த ஆண் ஒருவரை போலியாக திருமணம் செய்து கொண்ட சீன நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, சீன நாட்டை சேர்ந்த 30 வயதான Cao Rongrong எனும் பெண், குடிவரவுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரில் தங்கியிருக்கும் விசாவை நீட்டிக்கும் பொருட்டு, அவரது வசதிக்காக போலித் திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, விசாவுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் பொய்யான தகவல்களை அப்பெண் கூறியது தொடர்பாக மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

Latest Videos

undefined

சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் உள்ள தாய் கிராம உணவகத்தில் அந்நாட்டை சேர்ந்த சென் வெய்யு (37) என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீனப் பெண்ணான Cao Rongrong திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலி திருமணத்துக்காக சென் வெய்யுவுக்கு 6,000 சிங்கப்பூர் டாலர்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், திருமண பந்தத்தில் அவர்கள் இருவரும் நுழைய வில்லை எனவும், திருமணத்தின் போது, அப்பெண்ணுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, பொய்யான தகவல்களை கூறி, இரண்டு முறை அப்பெண் விசா நீட்டிப்பு பெற்றுள்ளார்.

திருமணங்களின் தனிப்பட்ட தன்மை காரணமாக, குற்றத்தை கண்டறிவது கடினம் என்று வாதாடிய வழக்கறிஞர், குறைந்தது ஆறு மாத சிறை தண்டனை அளிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். இதுபோன்ற குற்றங்கள் திருமணத்தின் புனிதத்தை சிதைத்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.

சிங்கப்பூர் LKY நினைவு நாணயம் தயார்! விண்ணப்பித்தவர்கள் செப்.4 முதல் பெற்றுக்கொள்ளலாம்! - நாணய வாரியம் தகவல்!

அதேசமயம், சிறைத் தண்டனையை குறைக்க வாய்ப்புள்ளாதாக என Cao Rongrong தரப்பு வழக்கறிஞர் சேவியர் லிம் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண், தீவிர மனஉளைச்சலில் இருந்ததாகவும், மனச்சோர்வுக் கோளாறால் அவதிப்பட்டதாகவும் அவர் கூறினார். Cao Rongrong-இன் குழந்தைப்பருவம் சிக்கலாகவும், அவரது கடந்த காலம் சோகம் நிறைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

குற்றங்கள் நடந்த நேரத்தில், அப்பெண் தனது வணிக பார்ட்னரால் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்த வழக்கறிஞர் சேவியர் லிம், சிங்கப்பூரில் அப்பெண்ணுக்கு வேறு பல தொழில்கள் இருப்பதாகவும், அதன் மூலம் பணி அனுமதிக்கான விசாவை பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த உடனேயே அதனை ரத்து செய்ய அப்பெண் விரும்பியதாகவும், அது போன்று அவர் செய்வதற்கு முன்னதாக, மூன்று மாதத்திற்குள்ளாகவே அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் வழக்கறிஞர் சேவியர் லிம் தெரிவித்துள்ளார்.

click me!