குறைந்தபட்சம் 35 வயது நிரம்பிய ஒற்றையர் (Singles), சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் வேண்டுமானாலும் புதிய இரண்டு அறைகள் கொண்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவில் விண்ணப்பிக்க முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
தற்போது சிங்கப்பூரில் உள்ள விதிகளின்படி, நகரின் மையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள முதிர்ச்சியடையாத எஸ்டேட்களில் (Non-Mature) உள்ள பில்ட்-டு-ஆர்டர் (BTO) அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Non Mature எஸ்டேட் வீடுகள் என்பது நகரத்தில் இருந்து சற்று தொலைவில் பொது வீடுகள் மேம்பாட்டிற்காக அதிக நிலம் இருக்கும் இடங்களில் அமைக்கப்படும் வீடுகளாகும்.
எதிர்வரும் 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) இனி Mature மற்றும் Non-Mature என வகைப்படுத்தாது. அதற்கு பதிலாக, அதிலிருந்து தொடங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அவற்றின் இருப்பிடம் மற்றும் பிற பண்புகளைப் பொறுத்து ஸ்டாண்டர்ட், பிளஸ் அல்லது பிரைம் என வகைப்படுத்தப்படும்.
மேலும் இந்த மறுவகைப்படுத்தல், ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது ஏற்கனவே தொடங்கப்பட்ட குடியிருப்புகளுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
HDBன் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போதைய மானியங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நிலையான அடுக்குமாடி குடியிருப்புகளாக இருக்கும், குறைந்தபட்சம் அங்கு ஐந்து ஆண்டுகள் அங்கு வாசிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இதில் அடங்கும்.
MRT நிலையத்திற்கு அருகில் உள்ள "தேர்வு செய்யும் இடங்களில்" இருக்கும் Plus பிளாட்டுகளுக்கு HDB யிலிருந்து அதிக மானியங்கள் கிடைக்கும். ஆனால் அதிக கட்டுப்பாடுகளும் அங்கு இருக்கும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு காலம் 10 ஆண்டுகள், மேலும் கடுமையான மறுவிற்பனை நிபந்தனைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு புதிய வகைப்பாடு தொடங்கப்படும்போது, ஸ்டாண்டர்ட், பிளஸ் அல்லது ப்ரைம் என எந்த வகையிலும் ஒற்றையர் (Singles) BTO பிளாட்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பொது வீட்டுவசதிக்கான இந்த மாற்றங்களை திரு லீ அறிவித்தபோது, அதிக அளவிலான சிங்கப்பூரர்கள் தனிமையில் இருக்கத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென சொந்த வீடுகளை வாங்க விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
ஏழு பச்சிளம் குழந்தைகள் மரணம்.. கொடூரமாக கொன்ற சீரியல் கில்லர் - இறுதியில் கிடைத்த தண்டனை என்ன?