சிங்கப்பூர் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை.. அறிமுகமான Majulah Package - யாரெல்லாம் பயன் பெறுவார்கள்?

By Ansgar R  |  First Published Aug 21, 2023, 8:55 AM IST

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20ம் தேதி அன்று தனது தேசிய தினப் பேரணி உரையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், "இளம் முதியோர்கள்" அதாவது 50 வயதை கடந்தவர்கள் மற்றும் 60களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கான மஜுலாத் தொகுப்பை அறிமுகப்படுத்தி பேசினார்.


சிங்கப்பூர் அரசு சுமார் S$7 பில்லியன் செலவில் இந்த தொகுப்பை செயல்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று பாகங்களாக கூறுகளைக் கொண்டுள்ளது என்றும் இதனால் சுமார் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அல்லது 1973ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் இதனால் பயனடைவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. 

வருங்கால சந்ததியினருக்கு சுமையாக இல்லாமல் இந்த உறுதிப்பாட்டை மதிக்க இந்த அரசாங்க காலத்தின் வளங்களைப் பயன்படுத்தி, தொகுப்பின் முழு வாழ்நாள் செலவினங்களைச் சந்திக்க நிதி அமைச்சகம் (MOF) ஒரு புதிய நிதியை உருவாக்கும் என்றும் PM லீ விளக்கியது குறிபிடித்தக்கது. குறைந்த வருமானம் மற்றும் குறைந்த பணவசதி உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த தொகுப்பு உள்ளது என்றும், மேலும் அவர்களின் வருமானம் மற்றும் CPF சேமிப்பைப் பொறுத்து ஆதரவு தரப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

Tap to resize

Latest Videos

சரி யாரெல்லாம் இந்த "இளம் மூத்தவர்கள்" பட்டியலில் இணைக்கப்படுவார்கள்?

50 வயதை கடந்தவர்கள் மற்றும் 60களின் முற்பகுதியில் உள்ளவர்களை அரசாங்கம் "இளம் முதியவர்கள்" என்று அழைக்கிறது. அதாவது விரைவில் ஓய்வு பெறவிருப்பவர்கள் அல்லது சமீபத்தில் ஓய்வு பெறுவார்கள் என்று PM லீ கூறினார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. தர்மன் சண்முகரத்தினம் ஒரு வலுவான போட்டியாளர் - மனம் திறந்த டான் கின் லியென்!

இந்த வயது வரம்பில் இருப்பவர்கள் (இளம் மூத்தவர்கள்) தனித்துவமான நிலையில் உள்ளனர் என்றார் பிரதமர். அதாவது அவர்களது பழைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, ​​அவர்கள் "வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்பட்டனர்", ஆனால் இளையவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் "குறைவாகவே சம்பாதித்துள்ளனர்" மேலும் CPF அமைப்பின் மேம்பாடுகளில் இருந்து பயனடைய அவர்களுக்கு குறைந்த நேரமே இருந்தது என்றும் பிரதமர் கூறினார்.

அதேபோல இந்த வயதினர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தனித்து செயல்படும் வயதை எட்டாமல் இருக்கலாம் என்றும், ஆகையால் அவர்களுக்கு சில ஆதரவு தேவைப்படுகிறது என்றும் பிரதமர் தனது உரையில் கூறினார். ஆகையால் அவர்கள் கவலையை போக்க அரசு உதவ தயாராக இருக்கிறது, எனவே அவர்கள் கவலைகொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

"சம்பாதித்து சேமி"

இந்த போனஸ், இளம் முதியோர்கள் பணியிடத்தில் இருக்கும்போதே CPF சேமிப்பை உருவாக்க உதவுவதோடு, வேலை செய்பவர்களை முடிந்தவரை தொடர்ந்து செயல்பட ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள் ஆண்டுக்கு S$1,000 வரை CPF போனஸ் பெறுவார்கள்.

வழக்கமான முதலாளி மற்றும் பணியாளர் பங்களிப்புகளின் மேல் ஒருவரின் CPF கணக்கில் போனஸை அரசாங்கம் வரவு வைக்கும். ஒருவர் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலை செய்யும் வரை போனஸ் ஆண்டுதோறும் பெறப்படும். எடுத்துக்காட்டாக, 65 வயதில் ஓய்வு பெறத் திட்டமிடும் குறைந்த வருமானம் கொண்ட 55 வயது நபருக்கு, அவரது Earn and Save போனஸ், 10 ஆண்டுகளில் கூடுதல் CPF சேமிப்பில் (வட்டி உட்பட) $12,000 வரை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய சேமிப்பு போனஸ்

CPF நிலுவைகள் CPF அடிப்படை ஓய்வூதியத் தொகையை எட்டாத இளம் மூத்தவர்களுக்கு, ஒருமுறை S$1,500 போனஸை அரசாங்கம் வழங்கும். வேலை செய்யாதவர்கள், குடும்பத்திற்காக தங்கள் தொழிலை கைவிட்ட இல்லத்தரசிகள் உட்பட, எல்லாருக்கும் இந்த போனஸ் கிடைக்கும்.

மெடிசேவ்

இந்த தொகுப்பில் S$1,000 வரை ஒரு முறை MediSave போனஸ் இருக்கும். பெரும்பாலான இளம் முதியவர்கள் போதுமான MediSave நிலுவைகளைக் கொண்டிருந்தாலும், இன்னும் மருத்துவச் செலவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் ஆகையால் இந்த medisave அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் PM லீ.

ஏழு பச்சிளம் குழந்தைகள் மரணம்.. கொடூரமாக கொன்ற சீரியல் கில்லர் - இறுதியில் கிடைத்த தண்டனை என்ன?

click me!