சிங்கப்பூர் LKY நினைவு நாணயம் தயார்! விண்ணப்பித்தவர்கள் செப்.4 முதல் பெற்றுக்கொள்ளலாம்! - நாணய வாரியம் தகவல்!

By Dinesh TG  |  First Published Aug 21, 2023, 12:26 PM IST

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவரது உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
 


சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், கடந்த மே மாதம் 10 அவர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை வேண்டி விண்ணப்பிததவர்கள் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்துள்ளது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொண்ட அளவிற்கு நாணயங்கள் வழங்கப்படும் என்றும் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்கள் 3.3 மில்லியன் நாணயங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். என்றும், மொத்தம் 4 மில்லியன் LKY நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! மழைக்கு வாய்ப்பு குறைவு - சிங்ப்பூர் வானிலை மையம் தகவல்!

விண்ணப்பதாரர்களுக்கு நாணயங்கள் வழங்கியது போக எஞ்சியிருக்கும் நாணயங்கள், பின்னர் பொதுப் பரிவர்த்தனைக்கு வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

LKY நினைவு நாணயம் வேண்டி தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை, ஒதுக்கப்பட்ட நாணயங்களின் இருப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை நாணய வாரியம் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கும். நினைவு நாணயங்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதியில் இருந்து நவம்பர் 26ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

லட்சக்கணக்கில் லஞ்சம்.. சிங்கையில் சிக்கிய மலேசியர் பாலகிருஷ்ணன் - குற்றம் நிரூபணமானால் என்ன தண்டனை தெரியுமா?

click me!