வெள்ளை மாளிகையின் பிரைட் மாத கொண்டாட்டத்தில், டிக்டாக் பிரபலமான திருநங்கை ஒருவர், அதிபர் ஜோ பிடனின் முன் மேலாடையின்றி போஸ் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பிரைட் மாத கொண்டாட்டத்தில் மேலாடையின்றி போஸ் கொடுக்கும் வீடியோவை, ரோஸ் மோன்டோயா என்ற திருநங்கை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. டிக்டாக்கில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனை சந்தித்ததையும், பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனுடன் கைகுலுக்குவதையும் பார்க்க முடிகிறது. அந்த திருநங்கை வெள்ளை மாளிகையின் முன் தொடர்ச்சியான போஸ்களை கொடுப்பதையும் அந்த வீடியோவில் காணலாம்.
அதே நேரத்தில். "திருநங்கை உரிமைகள் மனித உரிமைகள்!"என்று மொன்டோயா திருநங்கைகளுக்கு ஆதரவான செய்தியை கேமராவில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகையின் பிரைட் மாத கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு முன்னால் மொன்டோயா மேலாடையின்றி செல்வதையும் வீடியோ காட்டுகிறது. மேலும் அதில், மொன்டோயா வெள்ளை மாளிகையின் முன் தொடர்ச்சியான பரிந்துரைகளை செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோ ஆன்லைனில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்: என்ன காரணம்?
டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ தலைமை நிர்வாக அதிகாரி சார்லி கிர்க் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் "கிராஃபிக்: திருநங்கை, டிக்டாக் இன்ஃப்ளூயன்சர், ரோஸ் மோன்டோயா, பிடனின் வெள்ளை மாளிகை பிரைட் கொண்டாட்டத்தில் மேலாடையின்றி போஸ் கொடுத்தார். அவருக்கு அடுத்ததாக மற்றொரு நபர், மேலாடையின்றி உள்ளார். அவர் மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவர் ”என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10-ம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரைட் மாத கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பிடென் நடத்தினார். இந்த நிகழ்வு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாக இருந்தது, அவர்கள் பழமைவாத மாநில சட்டமன்றங்களில் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று வெள்ளை மாளிகை குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிமலையில் இருந்து பொங்கி வழியும் நெருப்பு குழம்புகள்.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..