பிலிப்பைன்ஸில் உள்ள எரிமலையின் வெடித்து சிதறியதால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில், அல்பே மாகாணத்தில் மாயோன் என்ற எரிமலை உள்ளது. அந்நாட்டில் ஆக்டிவாக உள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த மாயோன் எரிமலை நேற்று வெடித்து சிதறியது. கடந்த வாரம் எரிமலை செயல்பாடு அதிகரித்ததால், அப்பகுதியை சுற்றி உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, மாயோன் எரிமலையை சுற்றி உள்ள வசிக்கும் 13,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேறி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள், இன்னும் அந்த எரிமலை அமைந்துள்ள பகுதியில் ஆபத்து மண்டலத்திற்குள் உள்ளனர்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு எரிமலை எரிமலையை வெடிக்க தொடங்கிய நிலையில், இந்த வெடிப்பு அதிகரித்தால் மாயோன் எரிமலையை சுற்றியுள்ள அதிக ஆபத்து மண்டலம் விரிவடையும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனத்தின் இயக்குனர் தெரெசிடோ பேகோல்கோல் கூறினார். ஒரு வேளை அது நடந்தால், விரிவாக்கப்பட்ட ஆபத்து மண்டலத்தில் உள்ள மக்கள் அவசரகால முகாம்களுக்கு வெளியேற தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அளிக்கும் உற்சாக வரவேற்பு!!
இதனிடையே எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை வெளியேறி வருவதால் மாயோனிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்கு அல்பே மாகாணத்தின் தலைநகரான லெகாஸ்பியின் கடலோர நடைபாதையில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேறினர். இதுகுறித்து அங்கு வசிக்கும் மிராண்டா என்ற நபர் பேசிய போது. "எங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது," என்று கண்ணீர் விட்டு கூறினார்.
எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு மெதுவாக கீழே பாய்வதால், 3-வது எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எரிமலை வெடிப்பு திடீரென ஆபத்தானதாக மாறினால் அதிகபட்ச எச்சரிக்கை நிலையான 5-வது நிலை வழங்கப்படும்.
பிலிப்பைன்ஸில் ஆக்டிவாக உள்ள 24 எரிமலைகளில் மாயோனும் ஒன்று. இது கடைசியாக 2018 இல் மோசமான வெடித்தது, பல்லாயிரக்கணக்கான கிராம மக்களை இடம்பெயர்ந்தனர். 1814 ஆம் ஆண்டில், மாயோனின் வெடிப்பு முழு கிராமங்களையும் புதைத்ததுடன் இதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த பக்தி ஆண்டுக்கு சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் தாக்கப்படுகிறது. பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் இடமாகும். 1991ல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் வடக்கே உள்ள பினாடுபோ மலை மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்: என்ன காரணம்?