ஜெர்மனியில் ராபர்ட் ரைமன் வரைந்த வெறும் வெள்ளைத்தாள் ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ளது.
ஜெர்மனியில் வெறும் வெள்ளை தாள் ஓவியம் ஏலத்திற்கு வரவுள்ளது. ஆனால் இதன் ஏலம் ரூ.9 கோடியில் தொடங்க உள்ளது. ஆம் உண்மை தான். இந்த கலைப்படைப்பு கலை உலகில் மற்றொரு சுற்று விவாதத்தை கிளப்பியுள்ளது. வெறும் வெள்ளைத்தாள் ஏன் இவ்வளவு விலைக்கு ஏலத்திற்கு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெனரல் 52" x 52" என்ற தலைப்பில் ராபர்ட் ரைமன் வரைந்த ஓவியம், இந்த வாரம் 13 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என ஏல நிறுவனம் கேட்டரர் குன்ஸ்ட் தெரிவித்துள்ளது. முதலில் பார்க்கும் போது இந்த கேன்வாஸ் காலியாகத் தோன்றலாம். இருப்பினும், இது வெள்ளை பற்சிப்பியால் வரையப்பட்டுள்ளது, இது எண்ணெய் மற்றும் நிறமிகளுடன் கலந்த கண்ணாடி தூசியை உள்ளடக்கிய ஒரு ஊடகமாகும்.
Coca-Cola, Pepsi-க்கு புது ஆப்பு.. கோலாவை அறிமுகப்படுத்திய சவூதி அரேபியா!
நீங்கள் வெள்ளை ஓவியங்களை வரைந்தீர்களா என்று ரைமனிடம் கேட்டதற்கு, அவர் பதிலளித்தார், "நான் என்னை வெள்ளை ஓவியங்கள் வரைவதாக நினைக்கவில்லை. நான் ஓவியங்கள் வரைகிறேன்; நான் ஒரு ஓவியன். வெள்ளை பெயிண்ட் என் ஊடகம். இதில் நிறைய வண்ணங்கள் உள்ளன. நான் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற நிறத்தைக் குறிக்கவில்லை; ஆனால், நிறம், அந்த அர்த்தத்தில் இருக்கும்” என்று கூறினார்.
undefined
தென் கொரியா விரைவில் பூமியில் இருந்து காணாமல் போகும் முதல் நாடாக மாறும்; ஏன் தெரியுமா?
இது வெற்று தாளாக இருந்தாலும், கூட அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், இது ஒளி, அசைவை பிரதிபலிக்கிறது என்றும் மற்றொரு ஓவியர் கூறினார்.
2019 இல் இறந்த ரைமனின் இந்த ஓவியம் அவரது படைப்பின் சாரத்தை சுருக்கமாகக் கூறுகிறது: வெள்ளை, தொடர், சதுரம், பகுப்பாய்வு மற்றும் கணக்கிடப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இது முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு ஃபிஷ்பாக் கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.