South Korea : ஏறக்குறைய கடந்த அரை நூற்றாண்டில் முதல் முறையாக, தென் கொரியா நாடு முழுவதும் இராணுவச் சட்டத்தை (அவசரநிலை பிரகடனம்) அறிவித்தது.
கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு விஷயமாக இன்று தென்கொரியா அந்நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. இன்று உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் பிறகு, திடீர் என்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் யோல், இரவு 11 மணி முதல் இராணுவச் சட்டம் அமலாகும் என்று அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதனால் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
தடை விதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன?
அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளடித்து. பாராளுமன்றம் (தேசிய சட்டமன்றம்), உள்ளூராட்சி மன்றங்கள், அரசியல் கட்சிகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் வேறு எந்த வகையான ஆர்ப்பாட்டங்களுக்கும் அரசியல் சங்கங்கள் மற்றும் இணைப்புகளும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளன.
தென் கொரியா விரைவில் பூமியில் இருந்து காணாமல் போகும் முதல் நாடாக மாறும்; ஏன் தெரியுமா?
ஊடகங்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு : அச்சு, வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களிலும் உள்ள ஊடகங்கள் அனைத்தும் இப்போது இராணுவச் சட்டக் கட்டளையின் ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை : தென் கொரியாவில் மக்கள் இனி வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது போராட்டங்கள் அல்லது பேரணிகளை ஏற்பாடு செய்யவோ முடியாது. வேலை நிறுத்தங்கள் மற்றும் பேரணி பேச்சுக்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. சமூக குழப்பத்திற்கு வழிவகுக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் எந்தவொரு செயலும் அங்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
போலி பிரச்சாரம், கருத்துகள் வெளியிடுவது, தவறான தகவல் பரப்புவது தண்டனைக்குரியவையாகும். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் உட்பட மற்ற மருத்துவ பணியாளர்கள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) 48 மணி நேரத்திற்குள் மருத்துவத் துறைக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் உண்மையாக வேலை செய்ய வேண்டும் மற்றும் தொடர்புடைய அதிகாரத்தின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மறுப்பவர்கள் அல்லது மீறுபவர்கள் இராணுவச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
எந்தவொரு தேச விரோத சக்திகளும், இராணுவச் சட்டங்களின்படி கையாளப்படும். அவசர நிலை பிரகடனம் காரணமாக இராணுவச் சட்டத்தின் கீழ், சாதாரண குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியர்களுக்கு எளிதாக வேலை விசா வழங்கும் 7 நாடுகள்! அதுவும் பல சலுகைகளுடன்!