ஓவர்நைட்டில் கோடீஸ்வரரான சிங்கப்பூர் தமிழர்! மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கியதால் அடித்த ஜாக்பாட்!

Published : Nov 30, 2024, 03:14 PM ISTUpdated : Nov 30, 2024, 04:01 PM IST
ஓவர்நைட்டில் கோடீஸ்வரரான சிங்கப்பூர் தமிழர்! மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கியதால் அடித்த ஜாக்பாட்!

சுருக்கம்

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்பிரமணியம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். 

சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரரானார், அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (8 கோடி ரூபாய்க்கு மேல்) பெரும் பரிசை வென்றுள்ளார். 

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பாலசுப்பிர்மணியம் என்பவர் தற்போது சிங்கப்பூரில் ப்ராஜக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முஸ்தபா ஜுவல்லரியில் தனது மனைவிக்கு தங்க சங்கிலி வாங்கினார். இந்த சங்கிலியின் மதிப்பு சுமார் 6,000 சிங்கப்பூர் டாலர் ஆகும். 
இந்த கடையில் 250 சிங்கப்பூர் டாலருக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தப்பட்டு வந்தது. இந்த போட்டியில் பாலசுப்பிரமணியனும் கலந்து கொண்டார். 

7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் இதுதான்! எங்குள்ளது தெரியுமா?

இந்த குலுக்கல் போட்டியில் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் அவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடிக்கும் அதிகம். தனக்கு பரிசு கிடைத்தது குறித்து பாலசுப்பிரமணியன் பேசிய போது “ இன்று எனது தந்தையின் 4-வது ஆண்டு நினைவு தினம். இந்த பரிசை அவரின் ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். இந்த தகவலை எனது தாய்க்கு தெரிவித்தேன். அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நான் வென்ற இந்த பரிசின் ஒரு பகுதியை சிங்கப்பூரில் நான் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டிற்கு தானமாக கொடுக்க போகிறேன்.” என்று தெரிவித்தார். 

இந்த குலுக்கல் போட்டியில் கலந்து மற்ற பங்கேற்பாள்ர்களும் பரிசுகளை பெற்றனர். இந்த போட்டியில் பல வாடிக்கையாளர்கள் US$5,000 (சுமார் ரூ. 4.2 லட்சம்) பரிசுகளுடன் வெளியேறினர்.

மனைவியின் மூலம் கணவருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பது இது முதல்முறை அல்ல. ஏப்ரல் 2023 இல், மலேசியாவின் கிளாங்கைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் ஆலோசனையைப் பின்பற்றி தங்கத்தை வென்றார். அவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5.6 கோடியை பரிசாக வென்றார்.

செங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அடிக்கடை லாட்டரி டிக்கெட்களை வாங்கும் பழக்கம் கொண்டவர்.  ஆனால் அவர் லாட்டரி டிக்கெட் வாங்கச் சென்றபோது வழக்கமான எண்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக பிக் ஸ்வீப் டிக்கெட்டை வாங்குமாறு அவரின் மனைவி கூறியுள்ளார். அதன்படி அவரும் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கிய நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது. 

விமான நிலையத்தில் 3 நிமிடங்களுக்கு மேல் கட்டிப்பிடிக்க தடை!

தனக்கு பரிசு விழுந்தது குறித்து பேசிய அவர் "என் மனைவி சொல்வதைக் கேட்டது எனக்கு வெற்றி பெற உதவியது. எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பணத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். மீதமுள்ள பணத்தை எனது மனைவி கையாண்டு வருகிறார்” என்று தெரிவித்தர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!