எங்க அதிபர ஆன்மீக பணிய செய்ய விடுங்கடா. உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சே என கைலாசாவின் பிரதமர் அலுவலகம் கண்டித்துள்ளது.
எங்க அதிபர ஆன்மீக பணிய செய்ய விடுங்கடா. உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சே என கைலாசாவின் பிரதமர் அலுவலகம் கண்டித்துள்ளது.
நித்யானந்தாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்குப் பதிலாக அவரது சிஷ்யையை ஆஷர் படுத்திய கர்நாடகா போலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.
அதற்கும் பதில் இல்லாததால் அவரை நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, ’நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலீசார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர்’ எனத் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள் ‘இதுதான் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் முறையா?’ எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கைலாசா நாட்டின் பிரதமர் அலுவலகம், ‘என்னை யாரும் தேடவில்லை. என் ஆன்மீக பயணம் காரணமாகவே நான் வெளிநாடு சென்று இருக்கிறேன். விரைவில் தனி நாடு வேலைகள் தொடரும்’எனத் தெரிவித்த்துள்ளார்.
இவனுங்க வேற. எங்க அதிபர ஆன்மீக பணிய செய்ய விடுங்கடா. உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சே. https://t.co/tznA9v25Mx
— PMO Kailaash (@SriKailashPmo)
பிரபல தமிழ் வார இதழ் ஒன்று நித்யானந்தா பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம் என சமூக வலைதளத்தில் வாசர்களிடம் கேள்வி கேட்டிருந்தது. அதற்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். அதில் ஒருவர், ’நித்தியும் முப்பது பெண்களும்' என டைட்டில் கொடுத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பி.எம்.ஓ.கைலாசா, ’’இவனுங்க வேற. எங்க அதிபர ஆன்மீக பணிய செய்ய விடுங்கடா. உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சே’’ என ரி-ட்விட் போட்டு பதிலடி கொடுத்துள்ளது.