அமெரிக்காவே அதற்கு காரணம் கொரோனா குறித்து சீனா வெளியிட்ட பயங்கர அதிர்ச்சி...!! பீதியில் உறைந்த 23 நாடுகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2020, 12:53 PM IST
Highlights

இதற்கிடையில்  கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராட அமெரிக்கா முன்வந்திருப்பதை வரவேற்பதாக சீனா அதிரடியாக தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு உதவிட அமெரிக்கா பலமுறை  விருப்பம் தெரிவித்த நிலையில் ,   

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்க நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற சீனா சம்மதம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு உதவ  அமெரிக்கா பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ,  சீனா அமெரிக்காவின் உதவியை ஏற்றுள்ளது .  உலகளவில் எதிரும் புதிருமாக இருந்த சீனாவும் அமெரிக்காவும் தற்போது கொரோனாவை கட்டுபடுத்த ஒன்றிணைந்துள்ளது .   சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 எட்டிப் பிடித்துள்ளது .  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 64 பேர் அதில் உயிரிழந்துள்ளனர்.  இதனால்  சீன மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் .   கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹன் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் தற்போது  23 க்கும் அதிகமான நாடுகளை  அச்சத்தில் ஆழ்த்திஉள்ளது.

 

அமெரிக்கா ,  பிரிட்டன் ,  தாய்லாந்து ,  தைவான் ,  இந்தியா ,  ஜப்பான் உள்ளிட்ட பல  நாடுகளுக்கு குரானா வைரஸ் பரவியுள்ளது.  இதில் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .  இதற்கிடையே தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது . நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,   ஹாங்காங் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவுக்கான எல்லையை மூடி உள்ளன .  அதேபோல் சீனாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வேக வேகமாக வெளியேறி வருகின்றனர் .  அதேபோல் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவுவதற்கு அமெரிக்கா ஒரு காரணம் என சீனா குற்றம்சாட்டியது, அதில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா  உதவிகளை செய்வதற்கு பதிலாக உலக நாடுகளிடம் வைரஸ் குறித்த அச்சத்தை உருவாக்காமல் இருந்தால் போதும் என சீனா அமெரிக்காவை கண்டித்திருந்தது . 

இதற்கிடையில்  கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராட அமெரிக்கா முன்வந்திருப்பதை வரவேற்பதாக சீனா அதிரடியாக தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு உதவிட அமெரிக்கா பலமுறை  விருப்பம் தெரிவித்த நிலையில் ,   தேவையான உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம் என  சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை ,  உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்வதற்கும் , அதை கட்டுப்படுத்த உதவுவதற்கும் அமெரிக்க நிபுணர்களும் சீன நிபுணர்களுடன் இணைந்து  உதவுவார்கள் என தெரிவித்துள்ளது.   அமெரிக்காவின் உதவியை சீனா ஏற்றுக்  கொண்டதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது .

click me!