போற போக்க பாத்தா ஒட்டுமொத்த சீனாவுமே அழிந்துவிடும்போல...!! கொத்துக் கொத்தா காவுவாங்குது கொரோனா...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2020, 11:21 AM IST
Highlights

ஒரே நாளில் 3, 238 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரையில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது 

சீனாவால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  இதுவரையில் சுமார் 426 பேர் இந்த வைரசுக்கு  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன . கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹனில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா  வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .  இந்நிலையில் சீனா முழுவதும் அது பரவியுள்ளதால் சீன மக்கள் உயிர் பயத்தில் மூழ்கியுள்ளனர்.  

இந்நிலையில் அந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . கொரோனாவை  கட்டுப்படுத்த மருந்துகள் இல்லாததால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர் .   சீனாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 65 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க பத்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை செயல்பட தொடங்கியுள்ளன .  மேலும் இந்த வைரசுக்கு 2859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  ஒரே நாளில் 3, 238 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரையில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது .  
 

click me!