ஆயிரக்கணக்கான காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்ட கொரோனா...!! அந்த ஆண்டவனுக்கே இது அடுக்காது...!!

Published : Feb 03, 2020, 07:10 PM IST
ஆயிரக்கணக்கான காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்ட கொரோனா...!! அந்த ஆண்டவனுக்கே இது அடுக்காது...!!

சுருக்கம்

அரசின் வேண்டுகோளுக்கிணங்க  சீனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன ,  அதிர்ஷ்ட நாளில் திருமணம் செய்ய வேண்டும் என காத்திருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.   

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக சீனாவில் அதிர்ஷ்ட நாட்களில் ஒன்றான பிப்ரவரி- 2 அன்று நடைபெறவிருந்த  ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன .  சீனாவைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சிறப்புவாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது , ஏன் என்றால் இந்த தேதியை எந்தப் பக்கத்திலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்  என்பதனால்தான் அது.  ஆனவே அந்நாளில்  திருமணம் செய்ய பலர் பிப்ரவரி 2ம் தேதிக்காக காத்திருந்தனர், ஆனால் சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தாக்கம் நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது .

இதில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர் , திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீர் கதறல் என  ஒட்டுமொத்த சீனாவே  பீதியிலும் சோகத்திலும்  மூழ்கியுள்ளது இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது ,  இதுகுறித்து செய்தி வெளியிட்ட சீனா அரசின் மக்கள் நலத் துறை அமைச்சகம் ,  பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று முடிவு செய்யப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள் . தற்போது நாட்டில்  நிலவும் சூழலை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.  அதிகமான மக்கள் கூடுவதால் அது பலருக்கு பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது . என கேட்டுக்கொண்டது . 

அரசின் வேண்டுகோளுக்கிணங்க  சீனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன ,  அதிர்ஷ்ட நாளில் திருமணம் செய்ய வேண்டும் என காத்திருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.   அதேபோல் திருமணத்தை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட சீனா அரசு இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை விரைவாகவும் அதிகக் கூட்டம் இல்லாமலும் நடத்த வேண்டும் என அறிவித்துள்ளது . அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது .

 

 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
ஹார்முஸ் ஜலசந்தியில் வரிசை கட்டி நிற்கும் 700 எண்ணெய் கப்பல்கள்..! இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு?