ஆண்டவா இதில் இருந்து மீள வழியே இல்லையா...!! ஒரே நாளில் 57 பேர் சுருண்டு விழுந்து பலி , கொடூரன் கொரோனா...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 3, 2020, 5:58 PM IST

சீனா மட்டுமின்றி அமெரிக்கா ,  மலேசியா ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது . சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது கொரோனாவின் பிடியில் உள்ளன .


கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த  24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 57 பேர்வரை  உயிரிழந்துள்ள சம்பவம் சீனாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது  இதுவரை 361 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர் .கொரோனா வைரஸ் சீனாவில் மிக வேகமாக பரவி வருகிறது .  சீனாவின் வூபேய் மாகாணம் வுஹன் நகரில் குரோன வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது .  இதனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என சீன அரசு கைவிரித்துவிட்டது.   ஆனாலும் அதைக் கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிபர் ஜிஜின்பிங் தெரிவித்துள்ளார் . 

Latest Videos

இதுவரை குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 25 முதல் 30 பேர் உயிரிழந்து வருகின்றனர் ,   குறிப்பாக இந்த வைரஸ் வௌவால்களை உண்ணும் கட்டு விரியன் பாம்புகள் மூலம் இந்த  வைரஸ் பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.  ஆகவே அந்த கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும்  உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . முதன் முதலில் சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தென்பட்ட கொரோனா சீனா முழுவதுக்கும் பரவி தற்போது வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்  காய்ச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.   சீனா மட்டுமின்றி அமெரிக்கா ,  மலேசியா ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது . சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது கொரோனாவின் பிடியில் உள்ளன .

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் , இது உலக சுகாதார அவசர நிலை என  பிரகடனப்படுத்தியுள்ளது .  கடந்த சில  வாரங்களில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருந்த நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார்  57 பேர் உயிரிழந்துள்ளனர் .  ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த சீனாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .   தற்போது வரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 17 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது  . ஆனால் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எப்போதும் இல்லாத அளவிற்கு மனித சமூகத்தை அச்சுறுத்தக்கூடிய வைரஸாக  கொரோனா உள்ளதால் , இந்த வைரசை   கட்டுப்படுத்துவதற்கான மருந்தை  கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன .  இந்நிலையில்  எச்ஐவி வைரஸை கட்டுப்படுத்த வழங்கும் மருந்தில் சில மாற்றங்களை செய்து  , கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்தை அதில் கலந்து அந்த மருந்து மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என தாய்லாந்து அரசு  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

click me!