அடி சக்கை, கொரோனோ வைரசுக்கு புதிய மருந்து..!! வல்லரசுகளை தூக்கி சாப்பிட்ட குட்டி நாடு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 3, 2020, 5:25 PM IST
Highlights

 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 வயது சீனப்பெண் இந்த மருந்தில் குணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ,  

கொரோனா  வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக தாய்லாந்து அரசு உற்சாகமாக தெரிவித்துள்ளது .  சீனாவின் வுஹனில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியுள்ளது இதில் சீன மக்கள் மரண பீதியில் ஆழ்ந்துள்ளனர்.  இதுவரையில் அங்கு 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு  உயிரிழந்துள்ளனர் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் அந்த காய்ச்சலுக்கு மருந்து கடுப்பு கண்டுபிடிக்க  சர்வதேச நாடுகள் போராடி வருகின்றன . இந்நிலையில் இந்த காய்ச்சல் குறித்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த வைரஸை சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை  ஆனாலும்  அதற்கான மருந்தை கண்டுபிடிக்க  தீவிரம முயற்ச்சி மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்நிலையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவிவருகிறது தாய்லாந்து நாட்டில் 19 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .  இந்தநிலையில் இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது .  டாக்டர் கிரிங்கஸ் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது .  முதலில் இந்த மருத்துவ குழு எச்ஐவிக்கு தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிக்கு  வழங்கியது ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை ,  அதைத் தொடர்ந்து வழக்கமாக கடுமையான காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன்  எச்ஐவி கிருமி தொற்று  நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து   குரோனோ வைரஸ் யோயாளிக்கு கொடுக்கப்பட்டது. 

அப்போது இந்த மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 வயது சீனப்பெண் இந்த மருந்தில் குணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ,  புதிய கலவை மருந்தை அந்தப் பெண்ணுக்கு கொடுத்த 48 மணி நேரத்திற்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது  இதையடுத்து அந்தப் பெண் தனது படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தது இதுமட்டுமல்லாமல் , அவருக்கு காய்ச்சலும் விலகி விட்டது.  ஆகவே இந்த புதிய மருந்தை அமெரிக்கா,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். 

 

 

click me!