உலகத்தையே ஆட்டிப் படைக்க திட்டம் போட்ட சீனா...!! ஒதுக்கிவைத்து தண்டனை கொடுத்த இந்தியா...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 3, 2020, 12:50 PM IST

கொரோனா வைரஸ் எதிரொலியாக  இந்தியா வரும் சீனர்களுக்கு  இ -விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்து அறிவித்துள்ளது . சர்வதேச நாடுகள் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடைவிதித்துள்ள நிலையில் , இந்தியாவும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது .  


கொரோனா வைரஸ் எதிரொலியாக  இந்தியா வரும் சீனர்களுக்கு  இ -விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்து அறிவித்துள்ளது . சர்வதேச நாடுகள் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடைவிதித்துள்ள நிலையில் , இந்தியாவும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் வுஹனில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது .  ஆரம்பத்திலேயே மிக  வேகமாக பரவிய இந்த வைரஸ் காய்ச்சலால்,  இதுவரை  சுமார்   300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

Latest Videos

இந்நிலையில் சீனாவில் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீன நாட்டிற்குச் செல்ல வேண்டாம் என அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி  வருகிறது. இந்நிலையில்  சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களால் அந்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு அந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின்  எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகம்  இந்தியா செல்வதற்கான வீசாவை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது .  இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கான இ-விசா வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது . இது உடனடியாக அமலுக்கு வருகிறது ,  அதாவது சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும்  . கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாவும் ரத்து செய்யப்படுகிறது .  அதேசமயம் கட்டாயம் இந்தியா செல்ல வேண்டும் என்பவர்கள் ,  பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம்  , அல்லது ஷாங்காய் அல்லது  குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்கள் ஆகிய  நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

click me!