கருணை காட்டாத கொரோனா வைரஸ்... கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்... உயிரிழப்பு 304-ஆக உயர்வு..!

By vinoth kumar  |  First Published Feb 2, 2020, 11:19 AM IST

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Latest Videos

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உயிரிழப்புகள் இல்லை. கொரோனா எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு அதிகமாகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற் கொண்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

இந்நிலையில், சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 304- ஆக உயர்ந்தது. மேலும், 14,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

click me!