ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாக்வுடன் இணைக்க திட்டம் இல்லை..!! உரிமை கொண்டாடிய இந்தியா, பீதியில் ஒதுங்கிய பாகிஸ்தான்...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 1, 2020, 11:16 AM IST

இந்நிலையில் இந்த செய்தி குறித்து எதிர்வினை ஆற்றி உள்ள பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ,  ஆயிஷா பரூக் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்கும்  திட்டம்  ஏதும் பாகிஸ்தான் அரசிடம் இல்லை


ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாக் வுடன் இணைக்கும் திட்டம் ஏதுமில்லை என பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.   பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.   காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா  ரத்து செய்ததுடன் ,   அந்த மாநிலத்தை  லடாக் ஜம்மு-காஷ்மீர் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததுடன்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைந்துக்கொண்டது.

 

Latest Videos

இந்தியாவின் இந்நடவடிக்கைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய பாகிஸ்தான்  காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை இந்தியா பறித்துவிட்டது.   இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்தியாவை கண்டிக்க வேண்டும் ,  என பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டு சென்றுள்ளது .  அதேபோல் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது .  இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்  6 வாரங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி முழுவதுமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்படும் என்றும் அதற்காக திட்டத்தில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது என்றும்  தகவலை வெளியிட்டுள்ளது .  அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கடைசி பிரதமராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இந்த செய்தி குறித்து எதிர்வினை ஆற்றி உள்ள பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ,  ஆயிஷா பரூக் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்கும்  திட்டம்  ஏதும் பாகிஸ்தான் அரசிடம் இல்லை ,  யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார் . இந்தியாவின் கட்டுபாட்டில் இருந்த  காஷ்மீரை இந்தியா முழுவதுமாக தன்னுடன் இணைத்து உள்ள நிலையில் ,  இதுபோன்ற புரளியை பாகிஸ்தான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது . அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியும்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா கூறிவரும் நிலையில் அதை விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்படும் எற என மத்திய அரசு கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் இந்த புரளியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

click me!