இந்தியர்களின் மூச்சுக்காற்று கூட என் மீது படக்கூடாது...!! வைராக்கியம் காட்டும் பாகிஸ்தான் பிரதமர்..!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 3, 2020, 12:05 PM IST

பாகிஸ்தானின் இந்த எதேச்சதிகார போக்கை  இந்தியா சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பிடம் புகார் கூறியது,   இந்நிலையில் மலேசிய பிரதமர்  மகாதீர் முகம்மதுவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மலேசியா செல்கிறார் .


மலேசியாவுக்கு ,  சுற்றி போனாலும் போவேனே தவிர ,  இந்திய வான்வெளியை பயன்படுத்த மாட்டேன் என  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .  இந்திய தலைவர்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான்  அனுமதி   மறுத்து வந்தநிலையில் தற்போதைய இம்ரான் கானும்  இம் முடிவை எடுத்துள்ளதாக  தெரிகிறது . கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர்  புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது பாகிஸ்தான்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் படுகொலை செய்யப்பட்டனர் .   இது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது . அதற்கு பழிவாங்கும் விதமாக இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது . 

Latest Videos

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது ,   அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை முழுமையாக இந்தியாவுடன் இணைத்துக் கொண்டதுடன்,   காஷ்மீர் ,  லடாக் என இரண்டு மாகாணங்களாக அறிவித்தது .  காஷ்மீர் விவகாரத்தை அடுத்து  சீனா உதவியுடன் பாகிஸ்தான்,    இந்தியாவை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐநா மன்றம் வரை இந்த விவகாரத்தை  கொண்டு சென்றுள்ள பாகிஸ்தான் இந்தியாவை சர்வதேச நாடுகள்  விசாரிக்க வேண்டும் எனவும்,   இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்க வேண்டும் எனவும் கலகம் செய்து வருகிறது .  இந்நிலையில்  இந்திய எல்லையில் பதற்றம் நீடித்து வருவதுடன் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நீறுபூத்த நெருப்பாக பகை நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,  மற்றும் பாரதப் பிரதமர் மோடி  உள்ளிட்ட இந்திய தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களின் போது தங்களின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்தது .  பாகிஸ்தானின் இந்த எதேச்சதிகார போக்கை  இந்தியா சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பிடம் புகார் கூறியது,   இந்நிலையில் மலேசிய பிரதமர்  மகாதீர் முகம்மதுவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மலேசியா செல்கிறார் .  அதாவது மலேசியா செல்ல இந்திய வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என இம்ரான்கான் முடிவு செய்துள்ளதாகவும் எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானாலும் சுற்றி போனாலும் போகலாமே தவிர இந்தியாவுக்குள் நுழைய வேண்டாம் என அவர் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக  உத்தரவிட்டதாக தெரிகிறது .  

click me!