சீனாவிலிருந்து இந்தியா வரத் தடை... கொரோனா வைரஸ் பீதியால் மத்திய அரசு அதிரடி முடிவு..!

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு தடைவிதித்துள்ளது. 


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு தடைவிதித்துள்ளது. 

கடந்த 2 வாரங்களாக சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.   சீனா சென்றவர்கள், சீனா நாட்டினரின் valid visa- க்களை  இந்திய அரசு ரத்து செய்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலிருந்து சீனா சென்றவர்கள் திரும்பி வந்த வண்ணம் இருப்பதை நிறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்த ஒருவர் ஜனவரி 31 - ம் தேதி தமிழகம் வந்துள்ளார். நேற்று முந்தினம் இரவு அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற அவர் சீனாவிலிருந்து வந்தவர் என்று தெரிய வந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

தற்போது அவர் சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார். நேற்று முந்தினம் இரவு அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற அவர் சீனாவிலிருந்து வந்தவர் என்று தெரிய வந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், “சீனாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவர் பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு உடல் நிலை சீராக உள்ளது. இன்னும் 30 நாட்களுக்குக் கூடுதல் கண்கானிப்பில் இருப்பார் “என்று கூறினார்.
 

click me!