என் ஆடைகளை கழற்ற சொன்னார்கள்.. அந்த இடத்தில் கை வைத்து அட்டூழியம் செய்தார்கள். கதறிய உக்ரேன் திருநங்கைகள்.

By Ezhilarasan Babu  |  First Published Mar 26, 2022, 12:49 PM IST

கியோவில் புறநகர்ப் பகுதியில் ஒரு கிராமத்தில் பாதாள அறையில் வசித்து வந்தோம். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் ராக்கெட் தாக்குதல் நடந்தது. அன்றுமுதல் குண்டு சத்தம் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தூக்கம் வரவில்லை, என் வாழ்க்கையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே  போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனில் இருந்து தப்பி செல்ல முயன்ற  திருநங்கைகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

30 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் நாட்டைவிட்டு  வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஒட்டுமொத்த உக்ரைனும் சிதைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வாழ வழியின்றி தப்பிச் செல்கின்றனர். பதுங்கு கிழிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து ராணுவம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த கட்டுப்பாடு பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள்  நாட்டை விட்டு வெளியேறி தப்பித்து வருகின்றனர். அதாவது தொழில்நுட்ப ரீதியாக சான்றிதழ் பெற்ற திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஆனால் ஆவணங்கள் இருந்தும் எல்லைக் காவலர்கள் அவர்களை தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

பெரும்பாலானோர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பதுங்குகுழியில் தஞ்சமடைந்துள்ளனர். சாலையில் நீண்ட வரிசையில் கார்களில் எல்லையில் இருந்து வெளியேற காத்திருக்கின்றனர். குறிப்பாக திருநங்கைகளுக்கும் எல்லையை கடக்க போராடி வருவதாக கூறுகின்றனர். உக்ரேன் எல்லைக் காவலர்கள் சோதனையின்போது தங்கள் ஆடைகளை கழற்றி விட்டு எல்லா இடங்களிலும் கைவைத்து தேடுகிறார்கள் என்றும், பெண்களின் தலைமுடியை பிடித்து இழுப்பது, அந்தரங்க உறுப்புகளில் கைவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அங்கிருந்து வெளியேறும் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜூடிஸ் என்ற திருநங்கை கூறுகையில் எல்லையை கடக்கும்போது வீரர்கள் எங்கள் மார்பகங்களை பிடித்து அழுத்தினர், அந்தரங்க உறுப்புகளை தொட்டு தடவினர், தங்கள் தலைமுடியை இழுத்து இழிவாக நடத்தினர். எல்லையோர படைவீரர்களின் செயல்கள் மிக கீழ்த்தரமாக இருந்தது.

அப்போது எங்களுக்கு நாங்கள் என்ன? விலங்குகளா என்று எண்ணத் தோன்றியது. அப்போது என்னை ஒரு ஆண் என கூறி எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை.  எப்படியோ தப்பித்து கியோவுக்கு சென்றேன் அங்கு எங்கள் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. எனது பாட்டியின் வீடும் ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டது, உக்ரைனில் எங்கு சென்றாலும் எங்களுக்கு பணம் இல்லை, கியோவில் புறநகர்ப் பகுதியில் ஒரு கிராமத்தில் பாதாள அறையில் வசித்து வந்தோம். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் ராக்கெட் தாக்குதல் நடந்தது. அன்றுமுதல் குண்டு சத்தம் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தூக்கம் வரவில்லை, என் வாழ்க்கையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். அது எனது உரிமை என்பதால் மீண்டும் எல்லையை கடக்க முயற்சிப்பேன்.

ஒருபோதும் நான் முயற்சியை விடமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இதேபோல் ஆலிஸ் என்ற திருநங்கையும் இதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களை எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அறையில் 3 அதிகாரிகள் இருந்தனர். என் ஜாக்கெட்டை கழட்ட சொன்னார்கள், என் மார்பகங்களில் கை வைத்து தேய்த்தார் இது நாங்கள் ஆண்கள் எனவும் கூறி எங்களை நாட்டுக்கு உள்ளாகவே அனுப்பி வைத்தனர் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தோம் ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
 

click me!