இந்தியா வர விசா தேவைப்படும் ஆனால் தன்னிடம் இந்தியா வருவதற்கான விசா இல்லை என்பதை புரிந்து கொள்கிறார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியை பார்க்காத வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை பார்க்க சிறு படகு மூலம் கடல் எல்லைகளை கடந்து இந்தியா வர திட்டமிட்டார்.
37 வயதான ஹோ ஹாங் ஹூங் தாய்லாந்தில் இருந்து 2 ஆயிரம் கிலோமீட்டர் கடல்வழி பயணம் மேற்கொண்டு இந்தியா வர முயற்சித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மும்பையில் பணியாற்றி வரும் தனது மனைவியை பார்க்க ஹோ ஹாங் ஹூங் வங்க கடலில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக காற்றடைக்கப்பட்ட சிறு படகு ஒன்றை ஹோ ஹோங் ஹூங் வாங்கியுள்ளார்.
கடற்படை விசாரணை:
பின் திட்டமிட்டப்படி கடல் பயணத்தை சிறு படகில் துவங்கிய ஹோ ஹாங் ஹூங் சிமிலன் தீவுகள் அருகே சென்று கொண்டிருந்த போது கடற்படை பாதுகாப்பு யூனிட்டிற்கு தாய் மெயின்லாந்து தகவல் கொடுத்தது. இதை அடுத்து கடற்படை சிறு படகை சுற்றி வளைத்து அதில் இருந்த ஹோ ஹாங் ஹூங்கை மீட்டு விசாரணை நடத்தியது. மீட்கப்படும் போது, ஹோ ஹாங் ஹூங்கிடம் காலி தண்ணீர் பாட்டில், பத்து பாக்கெட் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மட்டுமே இருந்தது.
கடல் பயணத்திற்கு மிகவும் அத்தியாவசியமான மேப், ஜி.பி.எஸ். அல்லது ஆடைகள் என எதுவுமே அவரிடம் இல்லை. பயணத்தை துவங்கும் முன், ஹோ ஹாங் ஹூங் முதலில் ஹோ சி மின் நகரில் இருந்து பாங்காக்கிற்கு மார்ச் 2 ஆம் தேதி விமான பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியா வர விசா தேவைப்படும் ஆனால் தன்னிடம் இந்தியா வருவதற்கான விசா இல்லை என்பதை புரிந்து கொள்கிறார்.
கடல் பயணம்:
விசா இல்லாமல், விமான பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை ஹோ ஹாங் ஹூங் அறிந்து கொள்கிறார். இதை அடுத்து பாங்காக்கில் இருந்து புகெட் பகுதிக்கு பேருந்து பயணம் மேற்கொண்டார். அங்கு காற்றடைக்கப்பட்ட படகு ஒன்றை வாங்கிய ஹோ ஹாங் ஹூங் மார்ச் 5 ஆம் தேதி இந்தியாவுக்கான தனது கடல் பயணத்தை ஒற்றை ஆளாக தனியே துவங்கினார். 18 இரவுகள் கடலில் தனியாகவே பயணம் செய்து கழித்த ஹோ ஹாங் ஹூங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டனர்.
"நடுக்கடலில் மீட்கப்பட்ட ஹோ ஹாங் ஹூங் மீது விசாரணை நடத்தப்பட்டு, பின் அவரை புக்கெட் பகுதிக்கு திருப்பி அனுப்பப்படுவார் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக வியட்நாம் மற்றும் இந்திய தூதரகங்களுக்கு ஹோ ஹாங் ஹூங் பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். எனினும், இரு நாட்டு தூதரகங்களிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை," என தாய்லாந்து கடற்படை கமாண்ட் சென்டர் அதிகாரி தெரிவித்தார்.