கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்...??? வெளியான பரபரப்பு தகவல்.

By Ezhilarasan Babu  |  First Published Jul 26, 2022, 4:44 PM IST

கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தாருடன் இலங்கையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவர் இலங்கையில் இருந்து தப்பிக்க இரு தமிழர்களே உதவினார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.


கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தாருடன் இலங்கையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவர் இலங்கையில் இருந்து தப்பிக்க இரு தமிழர்களே உதவினார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தமிழர்கள் மத்தியில்  மிகுந்த அதிர்ச்சியையும், யார் அந்த நபர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக இலங்கையிலுள்ள ' லங்கா மிர்ரர் '  என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை  சந்தித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த நாடும் சீர்குலைந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பசி பஞ்சத்தில் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் பொருளாதாரச் சரிவுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார், தொடர்ந்து மக்கள் போராட்டம்  தீவிரம் அடைந்ததுடன் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வந்தனர்.

Tap to resize

Latest Videos

ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்து வந்தார், இதனால் ஆத்திரமடைந்த இலங்கை மக்கள் பிரதமர் வீடு அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீக்கிரையாக்கினர், அதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் இலங்கை அதிபர் வீட்டுக்குள் நுழைந்து அதிபர் இல்லத்தை கைப்பற்றினர். இதனால் அதிபர் மாளிகை போர்க்களம் போல காட்சி அளித்தது. பொதுமக்கள் அதிபர் மாளிகையில் கிரிக்கெட் விளையாடுவது அங்குள்ள அறைகளில் மெத்தையில் தூங்குவது, நீச்சல் குளத்தில் நீந்துவது, பாத்ரூமில் குளிப்பது என மகிழ்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளடைவில் அதிபர் மாளிகையே சுற்றுலா தளம் போல மாறியது.

இதையும் படியுங்கள்: sri lanka economic crisis: tamilnadu:தமிழகத்தின் மனிதநேயம்: உணவு, நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

மக்களை வறுமையில் தவிக்க விட்டுவிட்டு ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என அதிபர் மாளிகையில் ஆடம்பரத்தை கண்டு மக்கள் இன்னும் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் தன் வீட்டை கைப்பற்றுவதற்கு முன்னரே தகவல் அறிந்த ராஜபக்சே  அங்கிருந்து வெளியேறினார், கொழும்பு சென்று அங்கிருந்து இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பலில் அவர் தப்பியதாக கூறப்பட்டது, அதன் பின்னர் இவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பணம் நகை மற்றொரு கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதேநேரத்தில் போராட்டம் தீவிரம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமான நிலையம் சென்று அங்கிருந்து தப்பித்தார் என்றும் கூறப்படுகிறது, இதற்கான சில வீடியோக்களும் வெளியானது, மொத்தத்தில் இலங்கையை விட்டு கூண்டோடு தப்பித்த கோத்தபயா ராஜபக்சே குடும்பத்தினர் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளனர் அங்கே தங்குவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில்  அவர்களுக்கு அடைக்கலம் தர சிங்கப்பூர் மறுப்பு தெரிவித்துள்ளது. எங்கு சென்றாலும் அங்கே தமிழர்களின் போராட்டம் வலுக்கும் என்பதால் என்ன செய்வது என தெரியாத நிலையில் பக்ஷே குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். இடையில் அடுத்து என்ன என்று வழி தெரியாத அவர்கள் இலங்கை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து கோத்தபய ராஜபட்ச மீண்டும் கொழும்பு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறம் உள்ள நிலையில் இலங்கையில்  போராட்டம் வெடித்த போது கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிக்க உதவியது ஒரு தமிழர் தான் என தகவல் வெளியாகியுள்ளது, லங்கா மிரர் என்ற இலங்கையைச் சேர்ந்த இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இலங்கை பொருளாதாரம்  கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது, அப்போதைய நாட்டின் உளவுத்துறை நாடு மோசமான நெருக்கடி நிலைக்கு செல்ல உள்ளதாகவும், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அதிபர் கோத்தபய உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் என்றும் ரகசிய அறிக்கை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் ராஜபட்ச தனியார் விமானம் மூலம் திருப்பதி வந்ததாகவும்,  அந்த விமானத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்க நகை மற்றும் பெருமளவிலான பணத்தை எடுத்துச் சென்றதாகவும் லங்கார மிரர் செய்தி வெளியிட்டுள்ளது, இலங்கையில் 2021 இறந்து கடுக்காய், ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த சரவணன் என்ற ஒரு தமிழர் ராஜபட்ச குடும்பத்தோடு மிக நெருக்கமாக  இருந்து வந்தார் என்றும், சமீபத்தில் அவர் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிக்க தனியார் ஜெட் விமானத்தை கொழும்புக்கு அனுப்பியதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: இலங்கைக்கான உதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் ரணில் கூறியது அம்பலம்!!

ஆனால் அதில் கோத்தபய ராஜபக்சே ஏற அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்காததால், பின்னர் அவர் ராணுவ விமானத்தில் ஏறி மாலத்தீவு சென்றதாகவும் செய்திகள் கூறப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் பணம் திருப்பதி, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஹவாலா பணமாக போலி நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்துள்ளதாகவும், ராஜபக்சேவின் பினாமியாக சரவணன் மற்றும் அவரது நண்பர் விஜய் செயல்படுவதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 

click me!