இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்புகிறார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் பந்துலா குணவர்த்தன தெரிவித்தார் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்புகிறார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் பந்துலா குணவர்த்தன தெரிவித்தார் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
இலங்கையி்ன் பொருளாதாரச் சீரழிவுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவருக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பதவியிலிருந்து விலகினர். இதில் கடந்த 9ம் தேதி மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், 13ம் தேதி இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்ச குடும்பத்துடன் தப்பினார்.
undefined
இலங்கையில் போதிய உணவு கிடைக்காமல் 60 லட்சம் மக்கள் பரிதவிப்பு; அலற வைக்கும் புள்ளி விவரங்கள்!!
மாலத்தீவுகளில் இருந்து, சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக் சென்றுவிட்டார். சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் வந்திருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் விசா வழங்கியுள்ளோம்.
அவர் அடைக்கலம் கேட்கவும் இல்லை, நாங்களும் அடைக்கலம் வழங்கவில்லை. தேவைப்பட்டால் அவர் கோரிக்கையடுத்து விசா காலம் கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் சிங்கப்பூருக்கு கடந்த 14ம்தேதி சென்ற கோத்தபய ராஜபக்சவுக்கு விசா காலம் 28ம்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து இலங்கை திரும்புவாரா அல்லது வேறு நாட்டுக்குச் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது.
Sri Lanka: கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச அமைப்பு சிங்கப்பூரில் வழக்கு!!
இது குறித்து இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் குணவர்த்தனாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளி்க்கையில் “ முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச எந்த நாட்டிலும் மறைந்திருக்கவில்லை. அவர் சிங்கப்பூரிலிருந்து வருவார் என எதிர்பார்க்கிறோம்.
இலங்கையை விட்டு கோத்தபய ராஜபக் தப்பிவிட்டார் மறைந்து வாழ்கிறார் என்பதை நான் நம்பவில்லை. ராஜபக்பக்ச எப்போது வருகிறார் என்ற விவரம் தெரியாது.” எனத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து கலைப்பொருட்கள் மாயம்!!
முன்னாள் அதிபர் கோத்தபய கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு குணவர்த்தனா பதில் அளிக்கையில் “ அதுபோன்று ஏதேனும் சூழல் இருந்தால், நாட்டின் பொறுப்பான அதிகாரிகள் முன்னாள் அதிபருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.