
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
பிலிப்பைன் நாட்டின் தலைநைகர் மணிலாவில் தனியார் விடுதி அமைந்துள்ளது. இன்று இரவு அங்கு நுழைந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர், பயங்கர துப்பாக்கி சூடு நடத்தினர்.
குறிப்பாக அங்கு, வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்து தங்கியுள்ளவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், மணிலாவின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகளின் உக்கர தாண்டவம் நீடித்து வருவதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில், உயிர் சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால், மணிலாவில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. மணிலாவில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.