
ஜெர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ரோபோ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது. கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக என்ற பைபிள் வாசகத்தை ரோபோ கூறுவது தேவாலயத்துக்கு வரும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
ரோபோ என்னும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கிவரும் நிலையில், தேவாலய பாதிரியார் பணியிலும் தற்போது ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ்-ன் நினைவை குறிக்கும் வகையில், wittenberg தேவாலயத்தில், இந்த ரோபோ பாதிரியார் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
Bless U 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ 2 கைகள், 2 கண்கள், மற்றும் டிஜிட்டல் வாயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்துக்கு வரும் பக்தர்களை இந்த ரோபோ ஆண் மற்றும் பெண் குரல்களில் வாழ்த்தி வரவேற்று, தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது.
கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக என்ற பைபிள் வாசகத்தை ரோபோ பாதிரியார் கூறுவது தேவாலயத்துக்கு வரும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.