இலங்கையில் பொருளாதார நெருக்கடி.. 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல் - வெளியான அதிர்ச்சி தகவல்

By Raghupati RFirst Published Jun 18, 2022, 4:52 PM IST
Highlights

Alert : பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அரசு. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.  இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. 

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை ஏற்கெனவே பெட்ரோல் டெலிவரி செய்ததற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும். ஆனால் கூறியபடி இலங்கை அரசால் கடன் தொகையை திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனால் இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?

வாகனங்கள் எல்லாம் பெட்ரோல் பங்க் முன்பு வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.பெட்ரோல் இல்லாததால் ரோட்டில் வாகனங்களே இல்லாமல் நெருக்கடி இல்லாமல் காட்சியளிக்கிறது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதியளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில், எரிபொருளைச் சேமிக்கும் முயற்சியில், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர் 

இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் கற்பித்தலை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

click me!