இந்தியாவிலிருந்து கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை... ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி!!

Published : Jun 15, 2022, 06:50 PM IST
இந்தியாவிலிருந்து கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை... ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி!!

சுருக்கம்

இந்தியாவிலிருந்து கோதுமை சம்பந்தப்பட்ட பொருட்களை  ஏற்றுமதி செய்ய  ஐக்கிய அரபு  அமீரகம்  தடை விதித்துள்ளது.  

இந்தியாவிலிருந்து கோதுமை சம்பந்தப்பட்ட பொருட்களை  ஏற்றுமதி செய்ய  ஐக்கிய அரபு  அமீரகம்  தடை விதித்துள்ளது.  சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் கோதுமை உற்பத்தியில் 2வது இடம் வகிக்கும் நாடு இந்தியா. இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளுக்கு கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு கோதுமை விளைச்சல் இல்லாததால் கடந்த மாதம் 13ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.  அதேநேரம் ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா மற்றும் இந்தியாவிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.  

எமிரேட்ஸ்  கோதுமையை இங்கிருந்து இறக்குமதி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கோதுமை இறக்குமதி முற்றிலுமாக தடை பட்டது. இதனையடுத்து கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதுமாக இந்தியாவை நம்பியிருந்தது.  பின்னர் கோதுமை ஏற்றுமதிக்கு  கடந்த மாதம் இந்தியாவும் தடை விதித்ததால், அந்நாட்டிற்கு கோதுமையை இறக்குமதிக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் கோதுமையை இறக்குமதி செய்யுமாறு தொடர்ந்து இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது. இருப்பினும் அத்தகைய கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் என்று தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,  கோதுமை மாவு மற்றும்  கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை  நான்கு  மாதங்களுக்கு (செப்டம்பர் வரை)  நிறுத்திவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  மே 13 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய  தடை விதிக்கப்படுவதாகவும்,  அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதி பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!