
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பிரச்சனையால் அங்கு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆட்சி மாற்றமே வந்துள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் வரிசையாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.
உலக நாடுகளே பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி, ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தன. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதற்கிடையே இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரி பொருளை இறக்குமதி செய்கிறது. ஆனால், சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜென ரேட்டர்களுக்கு ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக தேவையான எரிபொருளை பதுக்கி இருப்பு வைக்கின்றனர். இதை தடுக்க அடுத்த மாதத்தில் இருந்து இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க புதியமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி அனைத்து வாகன உரிமையாளர்களும், தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஜூலை மாதம் முதலாவது வாரத்தில் இருந்து, ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வாரத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த எரிபொருள் உத்தரவாதமாக வழங்கப்படும். எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும்வரை இந்த முறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் முறையில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வாராந்திர அளவிலான எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!