தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மணி நேரத்தில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தீயை அணைக்கும் பணிகளில் ஆறு தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
கராச்சியை அடுத்த அசிஸ் பட்டி பார்க் அருகில் உள்ள டோ யார்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக 440 இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இதர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்து நேற்று காலை 9.50 மணி அளவில் ஏற்பட்டு இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட 15 நிமிடங்களில் தீ அணைப்பு துறை, போலீஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
undefined
ஆறு தீயணைப்பு வாகனங்கள்:
“தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் குறைந்ததும், சேதம் அடைந்த வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்பிக்கப்பட இருக்கிறது,” என துணை ஆணையர் ஹூசைன் தெரிவித்து இருக்கிறார்.
தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மணி நேரத்தில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தீயை அணைக்கும் பணிகளில் ஆறு தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன, என்று கராச்சி மெட்ரோபொலிடன் கார்ப்பரேஷன் மூத்த தீ அணைப்பு துறை அலுவலர் முபீன் அகமது தெரிவித்து இருக்கிறார்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்புக்கு யாரும் பணி அமர்த்தப்படவில்லை. மேலும் அங்கு தீ அணைப்பான்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இந்த விபத்தில் 400 மோட்டார்பைக், 40 கார்கள், ஒரு பஸ் மற்றும் ரிக்ஷாக்கள் சேதம் அடைந்தன என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரிவான ஆய்வு:
தீ விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் வயரில் ஏற்ப்ட்ட ஸ்பார்க் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என மூத்த காவல் துறை எஸ்.ஐ. சையது அப்துல் ரஹிம் ஷெராசி தெரிவித்தார். எனினும், இது பற்றி தீ அணைப்பு துறை வழங்கும் இறுதி அறிக்கையில் தான் தீ விபத்து ஏற்பட்டதற்கு சரியான காரணம் தெரியவரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது மட்டும் இன்றி தீ விபத்து பற்றி முறையான விசாரணை நடத்த முகமது ஹனிப் சன்னா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தீ விபத்துக்கான காரணம் மட்டும் இன்றி, எதிர்காலத்தில் இது போன்ற தீ விபத்து சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இது பற்றி ஏழு நாட்களுக்குள் முகமது ஹனிப் சன்னா விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.