சிகாகோவில் இரவு விடுதியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் கடந்த சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சூப்பர் மார்க்கெட், தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களை மது மற்றும் நடனத்தோடு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள், அந்தவகையில் சிகாகோவில் உள்ள இந்தியானா என்கிற இரவு விடுதியில் ஏராளமானோர் உற்சாகமாக இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் இரவு விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். ,4 பேர் காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
2 பேர் பலி- 4 பேர் காயம்
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த போலீசார், சிகாகோவின் தென்கிழக்கில் உள்ள கேரியில் அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இதனையடுத்து பிளேயோஸ் நைட் கிளப்பின் நுழைவாயிலுக்கு அருகில் 34 வயதுடைய ஆண் மற்றும் 26 வயதுடைய பெண் காயத்தோடு இருந்த நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அந்த இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் காயங்களோடு சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறினர். ஏற்கனவே நிறவெறி பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில் தற்போது துப்பாக்கி சூடு நடைபெற்றதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
ஆட்சியர் பெயரில் வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு மெசேஜ்...! வடமாநில கும்பலில் தில்லாலங்கடி வேலை