சிக்கித் திணறும் சீனா... கொரோனா அதிகரிப்பால் மீண்டும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வரும் பீஜிங்...!

By Kevin Kaarki  |  First Published Jun 12, 2022, 9:31 AM IST

திடீர் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பீஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகின்றன.


சீன தலைநகர் பீஜிங்கில் திடீரென கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த வெள்ளிக் கிழமை 61 பேருக்கு புதிதாக  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு பாதிப்பு ஹெவன் சூப்பர்மார்கெட் பார் பகுதியில் இருந்து வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என பீஜிங் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திடீர் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பீஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகின்றன. இரண்டு மாவட்டங்களில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள், ஷாப்பிங் தலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. 

Latest Videos

undefined

வேகமாக பரவும் தன்மை:

“சமீபத்திய வைரஸ் தொற்று பரவல்...... மிக வேகமாக பரவும் தன்மை கொண்டு இருக்கிறது. மேலும் இது பலருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டு இருக்கிறது,” என பீஜிங் அரசு மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சு ஹெஜியன் தெரிவித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து முழு விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் அதிரடி தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சுமார் 2.2 கோடி பேர் வசித்து வரும் பீஜிங் நகரில் இதுவரை 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உஎள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக ஏப்ரல் மாத துவக்கம் முதலே பீஜிங்கில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வந்தது.

நேற்றைய பாதிப்பு விவரம்:

ஜூன் 11 ஆம் தேதி வரையிலான அடிப்படையில் மெயின்லாந்து சீனாவில் 275 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்களில் 134 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மற்ற 141 பேருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  முன்னதாக ஜூன் 10 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 210 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!