5ஜி சேவை: விமான நிறுவனங்களுக்கு அமெரி்க்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் எச்சரிக்கை

Published : Jun 16, 2022, 07:45 AM IST
5ஜி சேவை: விமான நிறுவனங்களுக்கு அமெரி்க்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் எச்சரிக்கை

சுருக்கம்

5ஜி வயர்லெஸ் சேவை புழக்கத்துக்கு வரும்போது, அதற்கு ஏற்றார்போல் தங்களை விரைவாக அமெரிக்க  விமானநிறுவனங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய விமானநிலையங்களில் ஏற்படும் தடங்கல்களை அடுத்த மாதத்திலிருந்து தடுக்க வேண்டும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

5ஜி வயர்லெஸ் சேவை புழக்கத்துக்கு வரும்போது, அதற்கு ஏற்றார்போல் தங்களை விரைவாக அமெரிக்க  விமானநிறுவனங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய விமானநிலையங்களில் ஏற்படும் தடங்கல்களை அடுத்த மாதத்திலிருந்து தடுக்க வேண்டும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் பில்லி நோலன் வெளியிட்ட கடிதத்தை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் “ ஜூலை மாதத்திலிருந்து சில விமான நிலையங்களில் சி-பி மற்றும் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. 5ஜி சேவை தொடங்கப்படும்போது, அதில் வரும் சிக்னல்கள் விமானத்தின் அல்டிமீட்டரில் ஊடுருவும். இந்த அல்டிமீட்டர் என்பது விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பதை வழங்கும் கருவியாகும். மோசமான வானிலை சூழலின்போது தரையிறங்குவதற்கு இதுதான் பயன்படும். இந்த கருவியின் சிக்னல்களில் 5ஜி சேவை தலையிடும்போது விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்துள்ளது.

ஆதலால், ரேடியோ அல்டிமீட்டருக்குள் 5ஜி சேவையின் அலைவரியை ஊருடுவாத வகையில் பாதுகாப்புஅம்சங்களை மேம்படுத்த அனைத்து விமானநிறுவனங்களும் தயாராக வேண்டும். 

5ஜி சேவையில் அலைவரிசை வலுவாக இருக்கும்போது, சில திறன் குறைந்த விமானங்கள் வானில் பறக்கும்போது, விமானநிலையங்களில் தரையிறங்குவதற்கு தேவையான உதவிகளை அல்டிமீட்டர் உதவியுடன் பெறமுடியாமல் போகலாம். 5ஜி சேவை தொடங்கப்படுவதால், விமானங்களுக்கு ஏற்படும் மோசமான சிக்கல் குறித்து கடந்த ஜனவரி 17ம் தேதி விமானநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது. 

பல்வேறு விமாநிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை அலைவரிசை ஜனவரி 19ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், வெள்ளை மாளிகையின் அழுத்தத்தின் காரணமாக அந்த சேவைஜூலை 5ம் தேதி தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆதலால், சி-பி பேண்ட் மற்றும் 5ஜி வயர்லெஸ் சேவை விமானத்தின் ரேடியோ அல்டிமீட்டருக்குள் ஊடுருவாதவகையில் விமானங்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எந்தெந்த விமானநிலையங்களில் சிக்னல்கள் குறைந்தபட்ச இடையூறுகள், அதிகபட்ச இடையூறுகள் இருக்கும் என்பதை அடையாளும் காணும்பணி தற்போதுதான் நடந்து வருகிறது. எனத் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!