ஆடு வெட்டுவதாக எண்ணி ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட விவசாயி.. அரை தூக்கத்தில் விபரீதம்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 22, 2022, 6:31 PM IST

வெளிநாட்டில் ஆடு வெட்டுவதாக எண்ணி அரைத்தூக்கத்தில் இருந்த விவசாயி தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்நபர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடான கானாவில் இந்தத் துயரம் நடந்துள்ளது.


வெளிநாட்டில் ஆடு வெட்டுவதாக எண்ணி அரைத்தூக்கத்தில் இருந்த விவசாயி தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்நபர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்க நாடான கானாவில் இந்தத் துயரம் நடந்துள்ளது.

பரந்து விரிந்த உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகள் பலவிதம், சிலர் தூக்கமின்மையால் தவிப்பர், இன்னும் பலர் தூக்கத்தில் நடப்பர், இந்த வியாதி உள்ளவர்கள், தூக்க கலக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது, இந்த வரிசையில் அரைத்தூக்கத்தில் ஆடு வெட்டுவதாக எண்ணி விவசாயி ஒருவர் ஆணுறுப்பை அடுத்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு: உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு விசித்திரமான  சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஆதார் அட்டை இருந்தா ரூ.4.78 லட்சம் கடன் கிடைக்குமா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி உண்மையா?

அது வெளிச்சத்திற்கு வரும் போது பலரையும் அவைகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது, அதுபோன்ற ஒரு துயரமிக்க நகைச்சுவை சம்பவம் ஆப்பிரிக்க நாடு கானாவில் நடந்துள்ளது. கானா நாட்டைச் சேர்ந்தவர் கோஃபி அட்டான் எனபவர் விவசாய தொழில் செய்து வருகிறார், 34 வயதாகும் அவர் வயலில் வேலை செய்துவிட்டு கலைப்பில் நாற்காலியில் அமர்ந்தவாறு தூங்கியதாக தெரிகிறது, அரைத்தூக்கத்தில் அவருக்கு கனவு ஏற்பட்டதாகவும், அதில் அப்போது குடும்பத்திற்காக அவர் ஆடு வெட்டுவது போன்ற கனவு தோன்றியதாகவும், அதில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னையும் அறியாமல் அவர் தனது ஆணுறுப்பில் விதைப்பைகளை அறுத்துக் கொண்டதாகவும், ஒரு விதைப்பை அறுபட்டதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்: வேலை செய்யுங்கள்; இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள்… இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!

காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டதையடுத்து கனவு கலைந்து எழுந்து பார்த்தபோது தனது விதைப்பை அறுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அரைத்தூக்கத்தில் வந்த கனவால் ஏற்பட்ட விபரீதத்தை கண்டேன் அலறிளேன் என்றும் பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் தெரிவித்தார். கடுமையான காயத்துடன் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் உயிருக்கு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்ப்பட்டு வருகிறது.  தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். 

இதுகுறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், குடும்பத்தினர்க்காக ஆடு அறுப்பது போல கனவு வந்தது, அதில் தன்னையறியாமல் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டதில் வலி ஏற்பட்ட பிறகே உணர்ந்துகொண்டேன், இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன், மருத்துவர்கள் ஊசி மற்றும் சிகிச்சை  கொடுத்து வருகின்றனர். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சைக்காக நிதி தேவைப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!