இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?

By Raghupati RFirst Published Aug 22, 2022, 4:28 PM IST
Highlights

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒழிப்பது அவ்வளவு சுலபம் என்றுதான் தோன்றுகிறது. நம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல வெளிநாடுகளில் இருந்த ஊடுருவல் முயற்சியும் நடந்து வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது ஒரு  அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றுதான் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்எஸ்பி வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.  

மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர், இந்தியத் தலைவர் ஒருவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் ஆளுங்கட்சி வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்வதற்காகவே இந்த நபரை துருக்கியைச் சேர்ந்த சிலர் பயிற்சி கொடுத்து தயார் செய்துள்ளனர்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அத்துடன் தொடர்புடைய அனைத்திற்கும் தடை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த தலைவர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகளுக்கு..அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

click me!