இலங்கையில் வரலாறு காணாத அளவு மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ரூ.253 உயர்த்தி சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசி) தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவு மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ரூ.253 உயர்த்தி சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசி) தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
undefined
தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
இலங்கையில் சமானிய மக்கள், கீழ் நடுத்தர மக்கள் பெரும்பாலும் மண்எண்ணெய் மட்டுமே சமையலுக்கு பயன்படு்த்தி வருகிறார்கள்.அவர்களுக்கு மானிய விலையில் ஒருலிட்டர் 87 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த மானியத்தால் தொடர்ந்து அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மண்எண்ணெய் விலை லிட்டருக்க ரூ.253 உயர்த்தி சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்தது. இதையடுத்து, இலங்கையில் ஒரு லிட்டர் மண்எண்ணெய் விலை லிட்டர் ரூ.340 ஆக உயர்ந்துவிட்டது.
கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை எரிசக்தி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் காஞ்சனா வஜீசேகரா பேசுகையில் “ இலங்கையில் தொடர்ந்து மண்எண்ணெய் எரிபொருளை மானியவிலையில் வழங்கி வருகிறோம்.
இது அரசுக்கு பெரும் சுமையாக இருக்கிறது, சிலோன் எண்ணெய் நிறுவனத்துக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது, இழப்பும் அதிகரித்து வருகிறது. ஆதலால், விரைவில் மண்எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும். மண்எண்ணெயை ஒருலிட்டர் தயாரிக்க ரூ.421 செலவாகிறது. ஆனால், 87 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். இது பெரும் நிதிச்சுமையையும், கடனையும் உருவாக்குகிறது ”எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இலங்கையில் மண்எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.253 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்தது. இனிமேல் மண்எண்ணெய் லிட்டர் ரூ.340க்கு விற்கப்படும்.
இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல்! - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்!
ஏற்கெனவே பெரும் பொருளாதார நெருக்கடியிலும், நிதிச்சுமையிலும் சிக்கி திணறிவரும் மக்களுக்கு இந்த விலைவாசி உயர்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும், தங்கள் தினசரி வாழ்க்கை வாழ மேலும் சிரமப்பட வேண்டியதிருக்கும்.