கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு நாடுகளும் வரி வருவாயை பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் மதுபானம்தான். குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இதில் அடங்கும். கொரோனா தொற்று பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
ஜப்பானில் 3ல் ஒரு பங்கினரின் வயது சராசரியாக 65 ஆகும். இந்நிலையில் 2020ல் மதுபான வருவாய் 6 ஆயிரம் கோடி ரூபாயாக ஆனது. அதற்கு முந்தைய ஆண்டில் மதுபானம் மூலமான வருவாய் 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 1989க்கு பிறகு ஜப்பானில் மது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியை இது குறிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !
2020க்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக நூறு லிட்டர் மதுபானங்கள் அருந்தியவர்கள், தற்போது 75 லிட்டர் தான் அருந்துகிறார்களாம். இதனால் ஜப்பான் அரசு தங்கள் நாட்டு இளைஞர்களிடம் மதுபான விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக சாக்கே விவா பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. சாக்கே என்பது ஜப்பானிய மதுபான வகையாகும்.
இது அரிசியை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. தண்ணீர் போன்று காணப்படும் இந்த பானம் ஒயினை விட அதிக ஆல்கஹால் கொண்டது. இந்த சாக்கே விவாவின் ஒரு பகுதியாக 20 முதல் 39 வயதினர் எப்படி எல்லாம் மீண்டும் மதுபான விற்பனையை அதிகப்படுத்தலாம் என்ற பிசினஸ் ஐடியாக்களை கூற வேண்டும்’ என்று கூறியுள்ளது.
கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் ஏற்கெனவே குறைந்து வரும் வரி வருவாயில் இது மேலும் தலைவலியாக மாறிவிடும் என அரசாங்கம் அஞ்சுகிறது. எனவே தான் ஜப்பான் அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்