இலங்கை வழியில் பூட்டான்; அந்நிய செலாவணி இருப்பு குறைவு; வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!!

By Dhanalakshmi GFirst Published Aug 20, 2022, 12:44 PM IST
Highlights

இலங்கையைத் தொடர்ந்து பூட்டான் நாட்டிலும் அந்நிய செலாவணி இருப்பு குறைந்து வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பைக் காப்பாற்ற பயன்பாட்டு வாகனங்கள், கனரக மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் தவிர அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு பூட்டான் அரசு தடை விதிக்கும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ராய்டர்ஸ் செய்தி நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ள பூட்டானில் வெறும் 800,000 க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். உக்ரைன் போரினால் ஏற்பட்ட எண்ணெய் மற்றும் தானியங்களின் விலை உயர்வு மற்றும் கொரோனா தொற்றுநோயின் தொடர்ச்சியான தாக்கத்தின் விளைவாக பூட்டானின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.  கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.

“போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரதமர்.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி !” வைரல் வீடியோ !

அந்நிய செலாவணி கையிருப்பு 970 மில்லியன் டாலராக 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் குறைந்துள்ளது. இதுவே 2021ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதம் 1.46 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை கடந்த மாதம் பூட்டான் ராயல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

20,000 டாலருக்கும் குறைவான விலை மதிப்பிலான பயன்பாட்டு வாகனங்களின் இறக்குமதிக்கு  அனுமதிக்கப்படும் என்றும், சுற்றுலாவைப் மேம்படுத்தும் வகையிலான பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நாட்டில் சிறுகுறு தொழிலை மேம்படுத்தும் வகையிலும், அந்நிய செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை பூட்டான் 8,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதுவும் அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு குறைவதற்கான கரணம் என்று அந்த நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அச்சச்சோ..! 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில்.. தூங்கிய விமானிகள்.. காத்திருந்த அதிர்ச்சி!

அந்த நாட்டின் சட்டப்படி, 12 மாதங்களுக்கு இறக்குமதி செய்யும் வகையில் அந்நிய செலாவணி இருப்பு இருக்க வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பை பொருத்து வரும் ஆறும் மாதங்களில் நிதி நிலைமைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று பூட்டான் தெரிவித்துள்ளது.

ஆசியாவில் இலங்கையைத் தொடர்ந்து சிறிய நாடான பூட்டானும் பொருளாதார சிக்கலில் உள்ளது. இலங்கையும் அந்நிய செலாவணி குறைந்த காரணத்தால், பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. அரசியல் மற்றும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. 

click me!