37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது அதிலிருந்து இரண்டு விமானங்கள் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
கார்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களின் ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது தூங்கினார்கள் என்று நாம் கேள்விப்பட்டு உள்ளோம்.ஆனால் விமானத்தை ஓட்டும் போது விமானத்தின் பைலட் தூங்கிய செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் 37 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
undefined
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?
சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் சுமார் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர். இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.
மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?
இதில் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்து இருக்கிறது. அதன்பிறகே விழித்த விமானிகள் இருவரும் விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்