ஆப்பிரிக்காவையும் வளைத்து இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கிறதா சீனா; ஜிபூட்டியில் பீஜிங் கப்பல் நிறுத்தம் ஏன்?

By Dhanalakshmi G  |  First Published Aug 19, 2022, 10:29 AM IST

ஆசியாவை மட்டுமின்றி ஆப்பிரிக்காவையும் சீனா குறிவைத்து முதலீடுகளை இறக்கியுள்ளது. ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் இருக்கும் ஜிபூட்டியில் சீனாவின் கடற்படைத் தளம் முழு அளவில் செயல்படத் துவங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. 


இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் போர்க்கப்பல் இந்தியாவை கண்காணிக்கும் வகையில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 071 டைப் வகை கப்பல் நீரிலும், நிலத்திலும் பயணிக்கும் போர்க் கப்பல். ராணுவ மற்றும் ராணுவம் அல்லாத பல்வேறு பணிகளில் இறங்கும் திறன் கொண்ட முதன்மை வகையைச் சேர்ந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல் தான் தற்போது ஜிபூட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜிபூட்டியில் உள்ள கடற்படைத் தளம் சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவ தளமாகும். 590 டாலர் மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல், இந்த கடற்படை தளம் கட்டப்பட்டு வந்துள்ளது. இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளைப் பிரிக்கும் பாப் எல் மாண்டேப் ஜலசந்தி பகுதியில் அமைந்து இருக்கிறது.  கடல் பகுதியில் சர்வதேச வர்த்தகத்தின் மிக முக்கிய போக்குவரத்து சேனலாக கருதப்படும் சூயஸ் கால்வாயை பாதுகாக்கும் வகையில் சீனாவின் கடற்படை அமைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

சீனாவின் ஜிபூட்டி கடற்படை தளம், ஒரு நவீன காலனித்துவ கோட்டையைப் போல, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கிருந்து நேரடி தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் இந்த கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

sri lanka: gotabaya rajapaksa: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் 'செட்டில்'?

கடற்படை தளத்தின் இருபுறமும் கப்பல்களை நிறுத்த முடியும். தளத்தின் கரைகள் குறுகியதாக இருந்தாலும், சீன ஹெலிகாப்டர் தனது பணியை இங்கே தொடரும் வகையில் உள்ளது. தற்போது, சாங்பாய் ஷான் என அடையாளம் காணப்பட்ட இந்தக் கப்பல், 800 வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 25,000 டன் எடையுள்ள ஒரு பெரிய கப்பலாகும். கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் கலவையாக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தபோது, இத்துடன் சீனாவின் மற்றுமொரு கப்பலும் உடன் வந்ததாக கூறப்படுகிறது. 

"டைப்-071 என்ற கப்பல் மிகப் பெரியது மற்றும் பல டாங்குகள், டிரக்குகள் மற்றும் ஹோவர் கிராஃப்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் திறன் படைத்தது. இந்த வகை கப்பலின் மற்றுமொரு வகை சீனாவின் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. கடற்படை தளத்திற்கு முதுகெலும்பாக திகழ்கிறது.  முக்கியமான பொருட்களை இந்த கடற்படை தளத்திற்கு கொண்டு வந்து சேர்க்கு  திறன் கொண்டது. தரையிலும், கடலிலும் இயங்கும் வகையில் மேலும் ஐந்து கப்பல்களை சீனா ஆப்பிரிக்க பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுடன் இணைத்துள்ளது.

China Ship : இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல்! - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அமெரிக்க கப்பல்:
ஆனால், அமெரிக்காவோ வேறு கதை கூறுகிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் இரண்டு பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்குள் வெளிப்படையாக மோதிக் கொண்டாலும், ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் உள்ள ஜிபூட்டி பகுதியில் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் கேம்ப் லெமோனியர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது தங்களிடம் ஜிபூட்டி மக்கள் உதவி கேட்டதாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் கடற்படை தளத்திக்கு அருகில் அமெரிக்காவும் கடற்படை தளம் அமைத்து இருக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்தே செயல்படுகிறோம் என்று அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பிரான்ஸ், ஜப்பான் நாடுகளும் தங்களது தளங்களை அமைத்து இருக்கின்றன.

இந்தியாவுக்கு ஆபத்தா?
இந்த நாடுகள் அமைத்து இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் சீனா ஈடுபடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது ஆப்பிரிக்க பகுதிகளையும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயலில் ஈடுபட்டு இருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவை இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், கம்போடியா, அந்தமான் நிகோபர் ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சீனா கடற்படை தளங்களை அமைத்து வருகிறது. தற்போது, ஆப்பிரிக்கா மட்டுமின்றி, அங்கோலா, கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றையும் சீனா குறி வைத்து இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், எக்குவடோரியல் கினியா பகுதியில் நிரந்தர ராணுவ தளத்தை அமைப்பதற்கு சீனா முயற்சித்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சூயஸ் கால்வாய்க்கு குறி:
ஜிபூட்டி அருகே தான் சூயஸ் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில்தான் உலகின் மிகப்பெரிய கடல் போக்குவரத்து நடந்து வருகிறது. இதை குறிவைத்து சீனா ஜிபூட்டியில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. பெல்ட் ரோடு திட்டத்தின் கீழ் ஜிபூட்டிக்கு சீனா பெரிய அளவில் கடன் வழங்கியுள்ளது. ஜிபூட்டியில் ரயில்வே தண்டவாளம் அமைப்பதற்கு, துறைமுகம் அமைப்பதற்கு, சாலைகள், கட்டிடங்கள் கட்டமைப்பதற்கு பெரிய அளவில் சீனா கடன் வழங்கி இருக்கிறது. இது தற்போது மேற்கத்திய நாடுகளின் கண்களையும் உறுத்தி வருகிறது.

யுவான் வாங் 5
இந்த நிலையில்தான், இந்தியாவின் தென்னிந்தியப் பகுதிகளை உளவு பார்க்கும் வகையில் சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற ஏவுகணைகளை தாங்கும், செயற்கைக்கோள் வசதிகள் கொண்ட கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், சீனா தனது கப்பலை நிலை நிறுத்தி இருப்பது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள், ஏரியல் சாதனங்கள், ஏவுகணை தளங்களை கண்காணிக்கும் திறன் கொண்டது சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல். 

இதுகுறித்த செய்திகளை என்டிடிவியின் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

click me!