இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்க க்ரீன்கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்க க்ரீன்கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்சேவின் மனைவி லோமா ராஜபக்ச அவரின் மகன்கள் ஆகியோர் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள். மனைவி, மகன்கள் குடியுரிமை பெற்றுவிட்டதால், கணவர், தந்தை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்கு ராஜபக்சே தகுதியானவர் என்றமுறையில் க்ரீன்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.இலங்கையில் வெளியாகும் டெய்லி மிரர் நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேறுவதற்கான அனைத்துப் பணிகளையும், க்ரீன் கார்டு பெறுவதற்கான பணிகளையும் கடந்த மாதமே, கோத்தபய ராஜபக்சேவின் வழக்கறிஞர்கள் தொடங்கிவிட்டனர். அமெரிக்க அரசு க்ரீன் கார்டு வழங்கிவிட்டால், தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் கோத்தபய ராஜபக்சே நேரடியாக இலங்கைக்கு வராமல் அமெரிக்காவில் சென்று செட்டில்ஆகிவிடுவார்.
இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய கோத்தபய ராஜபக்சே அதிலிருந்து ஓய்வு பெற்று, கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன்பெயரில் 2005ம் ஆண்டு இலங்கை திரும்பினார். அப்போது அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்சே வைத்திருந்தார்.
ஆனால் 2019ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், வேறுநாட்டு குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது என்ற விதி இருந்தது. இதன் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்சே துறந்தார். இப்போது மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கான பணியில் கோத்தபய ஈடுபட்டுள்ளார்.
இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுவதால் கொழும்புவில் உள்ள கோத்தபய வழக்கறிஞர்கல், அதைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
73 வயதான கோத்தபய ராஜபக்சே இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு, மக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அஞ்சிஅங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரில் வசித்து வருகிறார்.
இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல்! - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்!
இலங்கைக்கு இந்த மாத இறுதியில் செல்வதற்கு கோத்தபய ராஜபக்சே அவரின் மனைவி திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கோத்தபய ராஜபக்சேவை வெளியே செல்ல வேண்டாம் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் ஹோட்டலுக்குள்ளே இருக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சவிடம், பாங்காக் போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
பாங்காக்கில் எந்த ஹோட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கியுள்ளார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. தாய்லாந்து அரசு அதை ரகசியமாக வைத்துள்ளது.
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..வெளியான அதிர்ச்சி தகவல் - எப்போது தெரியுமா ?
கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு 24 மணிநேரமும் சீருடையில்லாமல் சிறப்பு போலீஸ் பிரிவு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் வரை ராஜபக்சே ஹோட்டலில் மட்டும்தான் இருக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தாய்லாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.