தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு.. 20 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Published : Aug 18, 2022, 11:14 AM ISTUpdated : Aug 18, 2022, 11:16 AM IST
தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு.. 20 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

சுருக்கம்

காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போதே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில்,. 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போதே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில்,. 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தலிபான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையும் படிங்க;- China Ship : இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல்! - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்!

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று ஏராளமானோர் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

உடனே தகவலறிந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதையும் படிங்க;-  ஆப்கானிஸ்தானில் கனமழையால் வெள்ளம்… குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் பலி!!

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!