இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் குறித்தி, இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து செயகைக்கோள் வசதிகள் கொண்ட வேவு பார்க்கும் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வருவதாக கூறப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இலங்கை அரசையும் கண்டித்தது. இலங்கையும் கப்பல் பயணத்தை ஒத்தி வைக்குமாறு சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனாலும், சீன கப்பல் பயணத்தை தொடர்ந்து இருந்தது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இது இலங்கை, இந்தியா இடையே பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பல் செயற்கைக்கோள் மூலம் உளவு பார்க்கும் திறன் கொண்டது. இந்தியாவின் எதிர்ப்பையடுத்து, இந்தக் கப்பல் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய, அமெரிக்க எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அண்டை நாட்டில் ஏற்படும் நிகழ்வுகளை இந்தியா கவனித்துக்கொண்டிருக்கிறது. வேண்டி நேரத்தில் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். ஆகவே, இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா கவனமாக பாரத்து வருவதாக தெரிவித்தார்.