இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..வெளியான அதிர்ச்சி தகவல் - எப்போது தெரியுமா ?

By Raghupati RFirst Published Aug 17, 2022, 11:12 PM IST
Highlights

இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வெகுண்டெழுந்து கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் வரலாறு காண முடியாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையாக திண்டாடி வருகின்றனர். இதனால் கொதித்து எழுந்த மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வெகுண்டெழுந்து கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதனால் கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பி சென்றார். இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தாய்லாந்து சென்றிருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் அவர் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் அவர் இலங்கைக்கு வந்தால் அடுத்து என்ன என்ன புது பிரச்சனைகள் வெடிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதரான வீரதுங்கா, 'என்னிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக கூறினார். பழையபடி மீண்டும் அவர் நாட்டிற்கு சேவையாற்றுவார் என்றும் கூறினார். இந்த தகவல் இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

click me!