ஐரோப்பாவில் வீசும் வெப்ப அலை புயல் காரணமாக இதுவரை 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் வீசும் வெப்ப அலை புயல் காரணமாக இதுவரை 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்ப அலை அதிகமாக காணப்படுகிறது. வளிமண்டலத்தின் உயர் அழுத்தங்களுக்கிடையே நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சுழற்சிதான் வெப்ப அலை உருவாக காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெப்ப அலை புயலாக உருமாறி ஐரோப்பாவில் நுழைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வீசும் அலைகளை வெப்ப அலை புயல் என்று குறிப்பிடுகின்றனர். ஜூன் மாத துவக்கத்தில் இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் சமீபத்தில் இல்லாத அளவாக 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாக துவங்கியது. இந்த நிலையில் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தலைநகரான லண்டனிலும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் 40 - 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. வெப்பத்தாக்கம் காரணமாக, மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தல் வெளியானது.
இதையும் படிங்க: இந்திய, அமெரிக்க எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5
அதிகம் வெயில் அடிக்கக்கூடிய சிவப்பு எச்சரிக்கை பகுதிகளுக்கு பயணப்பட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகமும் எச்சரித்துள்ளது. இந்த அளவு கடுமையான வெயிலை எதிர்கொள்ள ரயில்களை மெதுவாக இயக்க நிர்வாகம் முடிவு செய்ததால், பல ரயில்கள் மிக தாமதமாக பயணிக்க துவங்கின. கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் நீர்நிலைகளையும், நீச்சல் குளங்களையும் நாடிவருகிறார்கள். முன்பு வீசிய வெப்ப அலைகளால் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிக்கலை சந்தித்த நிலையில், இந்தாண்டு கொளுத்திய வெயிலுக்கு ஆரோக்கியமாக இருந்தவர்களும் தங்கள் இன்னுயிரை பறிகொடுக்க, பிரச்னை கைமீறி செல்வதை இங்கிலாந்து அரசு உணரத் துவங்கியது. இதையடுத்து அதிக வெயில் கொளுத்த வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணிக்கும் இடங்களுக்கு தேசிய அவசரநிலையை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை முடக்கும் பணியில் அரசு நிர்வாகம் இறங்கியது. 2 ஆவது வெப்ப அலை வீசத் துவங்கியபின், ஜூலை 19 அன்று ஏகப்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டதால் அதை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் தீயணைப்பு துறை திணறிப்போனது.
இதையும் படிங்க: சீனா-வுக்கு பதிலடி: இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியது இந்தியா
19 ஜூலையான இந்நாள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீயணைப்பு படைப்பிரிவின் பரபரப்பான நாளாக மாறியதாக கூறப்படுகிறது. கடும் வறட்சி நிலவுவதன் காரணமாக இங்கிலாந்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடிகள் ஒரு நபர் 3 -5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன. ஜெர்மனியில் ஜூன் 14 முதல் 20 வரை வீசிய முதல் வெப்ப அலையால் 39.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியதால், 1,636 பேர் வெப்பம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 11 முதல் 17 வரை வீசிய 2வது வெப்ப அலையால் 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தியதால், 6,502 பேர் வெப்பம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 2 அலைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் ஜெர்மனியில் மட்டும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர்.