இலங்கையில் சீனக் கப்பல் வந்திருக்கும் இந்த நேரத்தில் இலங்கை கடற்படையின் கண்ணிப்புக்காக ஒரு டோர்னியர் விமானத்தை இந்தியா பரிசாக வழங்கியது.
இலங்கையில் சீனக் கப்பல் வந்திருக்கும் இந்த நேரத்தில் இலங்கை கடற்படையின் கண்ணிப்புக்காக ஒரு டோர்னியர் விமானத்தை இந்தியா பரிசாக வழங்கியது.
இதன் மூலம் இலங்கை, இந்தியா இடையிலான நட்புறவு மேலும் அதிகரிக்கும், பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு, புரிதல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுநாயகன் விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இந்திய கடற்படையின் துணை அட்மிரல் எஸ்என் கோர்மடே, இலங்கைக்கான இந்தியத்தூதர் கோபால் பாக்லே ஆகியோர் வழங்கினார்.
இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்திருக்கும் இந்த நேரத்தில் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
இந்திய தூதர் கோபால் பாக்லே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியா, இலங்கையின் பாதுகாப்பு, புரிதல், பரஸ்பர நம்பிக்கை, கூட்டுறவு மேலும் மேம்படும். டோர்னியர் 228 ரக விமானம் இலங்கைக்கு இந்தியா சார்பில் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலம் கடற்புற எல்லைப் பாதுகாப்பு மேம்படும், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை, நட்புறவு வலுப்பெறும்”எ னத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தை இயக்குவதற்காகவும், பராமரிப்புப் பணிக்காகவும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு 15பேருக்கு 4 மாதங்கள் சிறப்பு பயிற்சியை இந்திய கடற்படை அளித்துள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மட்டதிலான பேச்சுவார்த்தையில் இரு டோர்னியர் விமானங்களை கண்காணிப்புப் பணிக்காக வழங்குவதாக இந்தியா அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக ஒரு டோர்னியர் விமானம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள டோர்னியர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்(ஹெச்ஏஎல்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
சீனாவின் யுவான் வாங்-5 எனும் உளவுக் கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு ஒருவாரப் பயணமாக வந்துள்ளது, இந்தக் கப்பல் வரும் 22ம் தேதிவரை ஹன்பன்தோட்டா துறைமுகத்தில் இருக்கும். இந்த கப்பலில் உள்ள நவீன உளவுக் கருவிகள், ரேடார் மூலம் இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியும், கண்காணிக்க முடியும் என்று இந்தியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள இந்நேரத்தில் இந்தியா டோர்னியர் விமானத்தை கண்காணிப்புக்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.